இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை பல ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017-ம் தேதி டிசம்பர் 11-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். கடந்த 2020 மார்ச் மாதம் அனுஷ்கா சர்மா கர்ப்பமானார். தொடர்ந்து அவருக்கு ஜனவரி மாதம் குறைந்த பிறக்கும் என மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த விராட்கோலி, டெஸ்ட் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார்.
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 11ந் தேதி விராட் அனுஷ்கா தம்பதிக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. இதனை சமூக வலைதளங்கள் வாயிலாக விராட்கோலி அறிவித்திருந்தார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விராட்கோலி அனுஷ்கா தம்பதியின் குழந்தைக்கு தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த இருவரும் தங்களது பெண் குழந்தைக்கு வாமிகா என்று பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,நாங்கள் இவருவரும் அன்பு, மற்றும் நன்றியுணர்வோடு ஒரு வாழ்கை முறையை வாழ்ந்தோம், தற்போது எங்களது குழந்தை வாமிகா அதை ஒரு புதிய மாற்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கண்ணீர், சிரிப்பு, கவலை, பேரின்பம் - சில நிமிடங்களில் சில நேரங்களில் அனுபவித்த உணர்வுகள்! தூக்கம் இது எல்லாம் இருந்தாலும் தற்போது எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளது. உங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து விராட் கோலி "எனது முழு உலகமும் ஒரே சட்டகத்தில் அடைந்துவிட்டது என தெரிவித்துள்ளார். மேலும் வாமிகாவை உலகிற்கு வரவேற்கும் விதமாக, அனுஷ்கா ஷர்மாவின் நண்பர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை காஜல் அகர்வால் “குழந்தை வாமிகாவுக்கு நிறைய அன்பு இருக்கிறது” ஜ்வாலா குட்டா ட்வீட் “வாழ்த்துக்கள் அனுஷ்கா என்று பதிவிட்டுள்ளார்.
செஃப் சினு என்பவர் இந்த அழகான உலகத்திற்கு வாமிகாவை வரவேற்பதாக பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, இஷான் கட்டர், ஹார்டிக் பாண்ட்யா, வாணி கபூர், சித்தாந்த் சதுர்வேதி, தியா மிர்சா, மவு னி ராய் மற்றும் நீதி மோகன் உள்ளிட்டோர் அனுஷ்கா ஷர்மா பதிவிட்டுள்ள படத்தில் இதய ஈமோஜிகளைக் கைவிட்டனர்.
இந்நிலையில், குழந்தை பிறந்த அன்று கேப்டன் விராட்கோலி வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று (ஜனவரி 11 )பிற்பகல் நாங்கள் ஒரு பெண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டோம் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
விராட்கோலியின் இந்த பதிவிற்கு ஏராளமாக வாழ்த்துக்கள் குவிந்தது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதல் சாய்னா நேவால் வரை பிரபலங்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"