Advertisment

உலக கோப்பையில் முதல் விக்கெட் வீழ்த்திய விராட் கோலி; அனுஷ்கா ஷர்மா ரியாக்‌ஷன்; வைரல் வீடியோ

உலகக் கோப்பையில் முதல் விக்கெட்டை வீழ்த்திய விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவை கைதட்டுமாறு சைகை செய்தார்; அவர்களின் மகிழ்ச்சி கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரல்

author-image
WebDesk
Nov 13, 2023 11:39 IST
New Update
virat kohli and anushka sharma

நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியின் போது விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா.

அனைவருக்கும் தீபாவளியை மேலும் சிறப்பிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, நேற்று (நவம்பர் 12) நடந்த இந்தியா மற்றும் நெதர்லாந்து ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது மைதானத்தில் தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களை பரவசப்படுத்தியது மட்டுமின்றி, தனது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுடன் மகிழ்ச்சியான தருணத்தையும் பகிர்ந்து கொண்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இருந்த விராட் கோலி, நெதர்லாந்துக்கு எதிராக தனது முதல் விக்கெட்டைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Virat Kohli gestures Anushka Sharma to clap as he takes maiden World Cup wicket, their joint celebration goes viral. Watch

முக்கியமான போட்டியின் போது, ​​விராட் கோலி 25வது ஓவரில் நெதர்லாந்தின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். விராட் கோலி மைதானத்தில் கொண்டாடியபோது இந்த அரிய சாதனையின் மகிழ்ச்சி தெளிவாக வெளிப்பட்டது, மேலும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிரசன்னம் அந்த தருணத்தை இன்னும் சிறப்பானதாக்கியது.

கோலி – அனுஷ்கா தம்பதியினரின் கொண்டாட்டத்தைப் படம்பிடிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, அவர்களின் ஆழமான பிணைப்பு மற்றும் காதல் மகிழ்ச்சியைக் காட்டுகின்றன. ஒரு வீடியோவில், விராட் கோலி தனது சாதனையைப் பாராட்டுமாறு அனுஷ்காவிடம் விளையாட்டாகக் கேட்பதைக் காணலாம்.

அவர்களின் கொண்டாட்டத்தை படம்பிடிக்கும் இரண்டாவது வீடியோவில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா உற்சாகமும் சிரிப்பும் நிறைந்த ஒரு சிறப்பு தருணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களின் மிகுதியான உற்சாகமும், பகிரப்பட்ட சிரிப்பும் போட்டியின் சிறப்பம்சமாக அமைந்தது.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதி கிரிக்கெட் போட்டியின் போது லைம்லைட்டை திருடுவது இது முதல் நிகழ்வு அல்ல. முன்னதாக நடந்துகொண்டிருக்கும் உலகக் கோப்பையில், அனுஷ்கா ஷர்மாவின் ’பேண்ட் பாஜா பாரத்’ திரைப்படத்தின் ஹிட் பாடலான ஐன்வாய் ஐன்வாய்பாடலுக்கு விராட் கோலி நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

பிஸியான கிரிக்கெட் அட்டவணை இருந்தபோதிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தீபாவளி பண்டிகைகளில் பங்கேற்பதை உறுதி செய்தது. பெங்களூரில் அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் ஒரு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது, அங்கு அனுஷ்கா ஷர்மா விராட் கோலியுடன் சேர்ந்து அந்த மாலை நேரத்தை அழகாக்கினார். இணையத்தில் பரவும் வீடியோக்களில், இந்த ஜோடி கொண்டாட்டத்திற்குச் செல்லும் போது மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டிருக்கிறது. அனுஷ்கா பாரம்பரிய உடையில் அசத்தினார், விராட் கோலி குர்தாவில் நேர்த்தியுடன் இருந்தார். இந்த ஜோடி ஒன்றாக போஸ் கொடுத்தது, அவர்களின் அழகான மற்றும் பாசமான தோற்றம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Virat Kohli #Anushka Sharma #cricket news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment