விக்ரம் பிரபுவுக்கு விராட் கோலி கொடுத்த சர்ப்ரைஸ்!

கடந்த 2007-ல் உஜ்ஜயினி என்பவரை மணந்தார் விக்ரம் பிரபு. இவர்களுக்கு விராட் என்ற மகன் உள்ளார்.

Virat Kohli's surprise to vikram prabhu
விக்ரம் பிரபுவுக்கு விராட் கோலி கொடுத்த சர்ப்ரைஸ்!

Virat Kohli’s Surprise to Vikram Prabhu: தினேஷ் செல்வராஜ் இயக்கியிருந்த ‘துப்பாக்கி முனை’ என்ற ஆக்‌ஷன் படத்தில், ஹன்சிகா மோத்வானி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து கடைசியாக நடித்திருந்தார் நடிகர் விக்ரம் பிரபு. தற்போது தனா இயக்கிவரும், ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குநர் மணிரத்னம் தயாரித்து வருகிறார்.

கடந்த 2007-ல் உஜ்ஜயினி என்பவரை மணந்தார் விக்ரம் பிரபு. இவர்களுக்கு விராட் என்ற மகன் உள்ளார். நேற்று விராட் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் விக்ரம் பிரபுவின் மகன் விராத்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் மிகவும் வெற்றிகரமான இந்திய கேப்டனாக மாறியிருக்கும் விராத் கோலி அதன் வெற்றிக் களிப்பில் உள்ளார். இருந்தபோதிலும் தனது நேரத்தை ஒதுக்கி, விக்ரம் பிரபுவின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த விக்ரம் பிரபு, ”ஸோ ஸ்வீட் ஆஃப் யூ விராத் கோலி. என்னுடைய மகனுக்காக நேரம் ஒதுக்கி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறீர்கள். உங்களின் வாழ்த்தாலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றதாலும் அவன் உற்சாகமாக இருக்கிறான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Virat kohlis surprise to vikram prabhu on his son birthday

Next Story
Verithanam: வெறித்தனமாக ஹிட்டடித்த விஜய்யின் ’வெறித்தனம்’!Thalapathy Vijay Verithanam song his 10M 0n youtube
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express