scorecardresearch

அதிதி ஷங்கர் பெரிய படிப்பாளியா இருப்பாங்க போல… 10-ம் வகுப்பு மார்க் இணையத்தில் லீக்!

அதிதி ஷங்கர் தற்போது கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

அதிதி ஷங்கர் பெரிய படிப்பாளியா இருப்பாங்க போல… 10-ம் வகுப்பு மார்க் இணையத்தில் லீக்!

விருமன் என்ற ஒரு படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமான நாயகியாக வலம் வரும் நடிகை அதிதி ஷங்கர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரன் நடிப்பில் தயாராகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இவரின் மகளான அதிதி ஷங்கர் தற்போது கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

மருத்துவம் படித்துள்ள அதிதி ஷங்கர் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தில் நாயகியாக மாறியுள்ளார். பிரம்மாண்ட இயக்குனரின் மகள் என்ற என்பதை மறக்கடித்து தனது திறமையின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். மேலும் விருமன் படத்தின் மூலம் பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.

விருமன் படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அதிதி, ஷங்கர் 10 வகுப்பில் ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் வாங்கிய மார்க் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதில் அனைத்து பாடத்திலும் அதிதி 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார்.

அதன்படி அறிவியலில் 99 மதிக்பெண்களும், கணக்கு பாடத்தில் 97 மதிப்பெண்களும். பிரெஞ்சு 97 மதிப்பெண்களும், சோசியல் ஸ்டடீஸ் 91 மதிப்பெ்களும், ஆங்கிலத்தில் 91 மதிப்பெண்களும் பெற்றுள்ளதாக அதிதி ஷங்கர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Viruman actress aditi shankar 10 th exam mark details viral on social media