விருமன் படத்தின் நடிக்க தொடங்கியதில் இருந்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அதிதி ஷங்கர், தற்போது விருமன் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் நாயகியாக மாறியுள்ளார்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் கார்த்தி, ராஜ்கிரன், பிரகாஷராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விருமன் படம் கடந்த 12-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பற்று வருகிறது.
நடிகையாக மட்டுமல்லாமல் தனது அறிமுக படத்திலேயே மதுரை வீரன் என்ற பாடலை பாடியதன் மூலம் முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அதிதி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பாரம்பரிய தோற்றத்தை மிஞ்ச எதுவும் இல்லை என்று அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“