/tamil-ie/media/media_files/uploads/2022/08/Aditi-Shankar.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் கார்த்தி, ராஜ்கிரன், பிரகாஷராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Aditi-Shankar-6.jpg)
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே விருமன் படம் நாளை (ஆகஸ்ட் 12) வெளியாக உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Aditi-Shankar-5.jpg)
ஷங்கரின் மகள் இந்த படத்தின் நாயகி என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில். டிரெய்லரை பார்த்து அவரின் நடிப்பை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Aditi-Shankar-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Aditi-Shankar-3.jpg)
மேலும் தனது அறிமுக படமாக விருமன் படத்தில் மதுரை வீரன் என்ற பாடலை பாடியதன் மூலம் முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Aditi-Shankar-2.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அதிதி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனிடையே அவரின் முதல் படமான விருமன் நாளை வெளியாக உள்ள நிலையில். படத்திற்கு தனது சைடில் இருந்து அதிதி ப்ரமோஷன் செய்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Aditi-Shankar-1.jpg)
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் விருமன் படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.