விருமன் திரைப்பட வெற்றி கொண்டாட்டம் மதுரையில் நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் கார்த்தி, சூரி, நடிகை அதீதி சங்கர் , இயக்குனர் முத்தையா உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்தனர்.
சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கி உள்ள விருமன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகி உள்ள விருமன் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் ஷங்கர் இயக்கிய படங்கள் என்றாலே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து விடுவார்கள். இந்நிலையில், முதல் முறையாக அவரது மகள் அதிதி ஷங்கர் எப்படி நடித்து இருக்கிறார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் தியேட்டருக்கு திரண்டு வருகின்றனரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார் அதிதி ஷங்கர் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் விருமன் திரைப்பட திரையிடப்பட்டுள்ள திரையங்குகளில் ரசிகர்கள் சந்தித்து நடிகர் கார்த்தி பேசுகையில் : ”இங்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. சென்னையில் கூட வெற்றியை கொண்டாவில்லை. இங்கு வந்து கொண்டாடினால் திருப்தி என்பதால் மதுரைக்கு வந்துள்ளோம். பருத்திவீரனுக்கு பின்னர் லோக்கலா இது போன்ற படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றியையும் பெற்றுதந்துள்ளது. மதுரை ரசிகர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி . திரையரங்குகளுக்கு பொதுமக்கள் வருகை தர தொடங்கியுள்ளனர் என்பது விருமன் வெற்றி காட்டியுள்ளது, ரசிகர்களின் அன்புதான் எங்கள் உயிர் , விருமன் படத்தை வெற்றியடை செய்த ரசிகர்களுக்கும் , திரையரங்கு நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி என்று கூறினார்.