இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள விருமன் படம் வெளியாவதற்கு முன்பே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் வரும் ’கஞ்சாப்பூ கண்ணால’ பாடல் வைரலானது. மேலும் இந்த படத்தின் புரோமோஷன்கள் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டின.
படம் குடும்ப ரசிகர்களை கவரும் என்றும் அதிதி சங்கர் அறிமுகம் நாயகி போல் நடிக்கவில்லை என்றும் அசத்தலாக நடித்துள்ளார். நன்றாக நடனம் ஆடியுள்ளார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளர். பெற்றோரை குழந்தைகள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அது அவர்கள் பொறுப்பு என்று படம் நமக்கு சொல்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் நடிகர் கார்த்தி செம கூலாக நடித்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தை பார்த ரசிகர்கள் தங்களது கருத்துவக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி படம் ஜாலியாக இருந்தது. உணர்வுகளாகவும், காமெடியாகவும் படம் நம்மை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.