விஷாலின் ஆக்ஷன் மூவி ட்ரைலர் வெளியீடு – சுந்தர்.சி-யின் புதிய முயற்சி

கட்டிடங்களிலிருந்து குதித்து, துப்பாக்கிகளைச் சுடுவது மற்றும் ஹீரோவுக்கு நிகராக போரிடுவது போன்ற ஒரு வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார்

VIshal New movie ' Action' trailer released online : விஷால் மூவி ட்ரெய்லர்
VIshal New movie ' Action' trailer released online : விஷால் மூவி ட்ரெய்லர்

Action trailer: Vishal-Tamannaah promise an entertaining film : நவம்பர் மாதத்தில் வரவிருக்கும் விஷாலின் ‘ஆக்‌ஷன்’ திரைபடத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  சுந்தர். சி இயக்கியுள்ள இப்படத்தில்  தமன்னா மற்றும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் பொழுது , சுந்தர்.சி  டிஸ்ட்ரிக்ட்  13 மற்றும்  மிஷன் இம்பாசிபிள் என்ற இந்த இரண்டு படங்கள் சந்திக்கும் இடத்தில்  ஆக்‌ஷன் கதைக் கறு அமைந்துள்ளதாக தெரிகிறது.

ட்ரெய்லரைப் பார்த்தால், படத்தில்  ஹீரோ விஷால் பல தாண்டுதல் காட்சிகளில் நடித்திருக்கிறார்  .  விஷால்  ஆயுதமேந்திய போலீஸ்காரர்களிடம் இருந்து  தப்பிப்பதைக் காண்கிறோம். இந்தியா ராணுவ அதிகாரியாக  விஷாலும், இன்னொரு அதிகாரியாக தமன்னாவும் நடித்துள்ளனர்.

 

அதிக ஆபத்துள்ள கார் காட்சிகளில் ஈடுபடுவது, கட்டிடங்களிலிருந்து குதித்து, துப்பாக்கிகளைச் சுடுவது மற்றும் ஹீரோவுக்கு நிகராக போரிடுவது போன்ற ஒரு வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி  டிரெய்லரில் வந்து போகிறார் .

விஷாலின் கதாபாத்திரத்திற்கு உதவும் தன்மையாக  யோகி பாபு வசனங்கள் உள்ளன . முடிவில், ஆன்லைன் வங்கியின் மூலம் கொள்ளையடிக்கப்படுவது குறித்து விஷாலின் முந்தைய படமான இரும்புத்திரை படத்தை பற்றி பேசுவது யோகி பாபுவுக்கு உரித்தான வசனம்  .

இசையமைப்பாளர் கிப்கொப் தமிழா  இசை அமைத்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vishal action movie trailer released sundar c action thriller commercial movie

Next Story
இதனால் தான் இவர் உலக நாயகன் – தசாவதாரம் கேரக்டர்கள் குருதிப் புனல் பேசினால்… (வீடியோ)kamalhaasan quarantined?, corona virus
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com