விஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2

இரண்டாண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் இயக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. 

Vishal - Mysskin to start Thupparivalan 2
Vishal – Mysskin to start Thupparivalan 2

கடந்த 2017 செப்டம்பரில் இயக்குநர் மிஷ்கின் இயக்கி விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன்.

துப்பறிவதை களமாகக் கொண்ட க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகியிருந்தது. இதில் விஷாலுடன் இணைந்து வினய், பிரசன்னா, ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலே இதனைத் தயாரித்திருந்தார். ஆரோல் கரோலியின் பின்னணி இசை துப்பறிவாளன் படத்துக்கு வலு சேர்த்திருந்தது.

படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று கணிசமான லாபத்தையும் ஈட்டித் தந்தது.

இரண்டாண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் இயக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.

விஷால் தற்போது இயக்குநர் சுந்தர் சி-யின் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கப்படோசியாவில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற இயக்குநர் மிஷ்கின், விஷாலையும் சுந்தர் சி-யையும் சந்தித்திருக்கிறார்.

இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. விரைவில் துப்பறிவாளன் 2 பற்றிய மற்ற விபரங்கள் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vishal and mysskin to start thupparivalan

Next Story
என் படங்களை முதலில் க்ளைமேக்ஸில் தான் துவங்குவேன் – தியாகராஜன் குமாரராஜா!Thiyagarajan kumararaja
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com