புது மாப்பிள்ளை ஆன முரட்டு சிங்கிள்... விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம் லேட்டஸ்ட் போடோஸ்!

நடிகர் விஷால் மற்றும் நடிகை தன்ஷிகா இன்று திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்தாலும், அதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் நடைபெறாததால், அவர்களது திருமணம் நிறுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகர் விஷால் மற்றும் நடிகை தன்ஷிகா இன்று திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்தாலும், அதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் நடைபெறாததால், அவர்களது திருமணம் நிறுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-29 130032

2004-ஆம் ஆண்டு 'செல்லமே' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால், 21 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது தந்தை ஒரு தயாரிப்பாளர். அண்ணனும், அண்ணியும் நடிகர்கள். திருட்டு விசிடியை ஒழிக்க இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், இவர் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Advertisment

13 ஆண்டுகளுக்கு முன்பு நின்றுபோன 'மதகஜராஜா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியபோது, விஷாலின் கை, கால்கள் நடுங்கியதுடன், முகம் வீங்கியிருந்தது. இதனால், அவருக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. பின்னர், அவருக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாகவே கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, அவர் 'மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

'யோகி' திரைப்பட விழாவில் நடிகை தன்ஷிகாவை காதலிப்பதாக விஷால் அறிவித்தார். இவர்களது திருமணம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி, விஷாலின் பிறந்தநாள் அன்று நடைபெறும் என்றும், புதிதாகத் திறக்கப்படும் நடிகர் சங்கக் கட்டிடத்தில் திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த சில தினங்களாகவே திருமணத்துக்கான எந்த ஏற்பாடுகளும் நடந்ததாகத் தெரியவில்லை. யாருக்கும் திருமண அழைப்பிதழ் வைக்கப்பட்டது போல் தெரியவில்லை. இதனால், ஏற்கெனவே ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நின்றுபோனது போல், இப்போதும் விஷாலின் திருமணம் நின்றுவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

இன்று நடிகர் விஷாலின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாகா அமைந்தது. அவர் தனது பிறந்த நாளை ஒட்டி, நடிகை சாய் தன்ஷிகாவுடன் தனது நிச்சயதார்த்தத்தை சென்னையில் இனிதே நிகழ்த்தினார். இந்த சிறப்பான நிகழ்வின் புகைப்படங்களை விஷால் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார், இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எளிமையாக இருந்தாலும், மிகுந்த உணர்வுப் பூர்வமாகவும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் நடந்துவிட்டது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு சினிமா விழாவில், நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய உள்ளதென நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதற்குப் பிறகு அவர் கூறியதாவது, நடிகர் சங்க புதிய கட்டடம் திறக்கப்பட்ட பிறகு, அதே இடத்தில் தனது பிறந்த நாளன்று திருமணம் நடைபெறும் என திட்டமிட்டிருந்தார்.

எனினும், நடிகர் சங்க கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் இன்னும் முழுமையடையாததால், திருமணத்திற்கு பதிலாக, இன்று தனது பிறந்த நாளில் நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்துள்ளார். இது எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு ஒரு படியாகவும், உறுதியான செயலாகவும் பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வைச் சுற்றி உள்ள சூழ்நிலைகள் மற்றும் விஷாலின் முடிவுகள், அவரது ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: