சிம்புவுக்கு உதவிய விஷால்

சிம்புவும் விஷாலும் நடிகர் சங்க தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிட்டவர்கள்.

வெள்ளியன்று சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் வெளியானது. சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகிறது என்று குஷியில் இருந்தார்கள், ரசிகர்கள். ஆனால் விதி வலியது. அன்று காலை நடந்த பஞ்சாயத்தால், முதல் காட்சி நிறுத்தப்பட்டது. மதியம் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகமும் எழுந்தது. விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பேசி முடித்ததால் மதியம் படம் ரிலீஸானது. சிம்புவும் விஷாலும் நடிகர் சங்க தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிட்டவர்கள். தனுஷையும் விஷாலையும் கிண்டல் செய்து வசனம் படத்திலும் இடம் பெற்றிருந்தது.

அதை நீக்கவும் இல்லை. இதுவரை விஷாலுக்கு ஒரு வார்த்தை நன்றியும் சொல்லவில்லை சிம்பு.

×Close
×Close