Vishal-Keerthy Suresh Starrer Sandakozhi 2 Audio Officially Launch in Chennai on 24th September: சண்டக்கோழி... லிங்குசாமி இயக்கத்தில் விஷால் ஆக்ஷனில் 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம்! இந்த நிலையில், 'சண்டக்கோழி 2' படம், அதே லிங்குசாமி - விஷால் கூட்டணியில் உருவாகியிருக்கிறது.
விஷாலுடன் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம், அக்டோபர் 18-ம் தேதியன்று திரைக்கு வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
சண்டக்கோழி 2 ஆடியோ ரிலீஸ்
சண்டக்கோழி 2 ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு அமர்க்களப்படுத்தினர். நிகழ்ச்சியில் விஷால் பேசும்போது, ‘சினிமா விமர்சனங்கள் ஒரு திரைப்படத்துக்கு மிகவும் முக்கியம். ஆனால், ஆன்லைன் மீடியாவில் படம் குறித்து விமர்சனம் செய்பவர்கள், அந்தப் படம் வெளியாகி மூன்று நாள்களுக்குப் பிறகு, அவரவர் விமர்சனங்களைப் பதிவு செய்தால், நன்றாக இருக்கும். ஒரு சில ஆன்லைன் மீடியாக்களுக்கு இதை என்னுடைய கோரிக்கையாகவே முன்வைக்கிறேன். இதை ஏற்றுக்கொண்டால், நன்றாகயிருக்கும்.
படம் குறித்த விமர்சனம் செய்வது உங்களுடைய பொறுப்பு, கடமை. ஆனால், படத்தின் முதல் மூன்று நாள்கள் படத்தில் நடித்தவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் முக்கியம். ஒரு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உங்களிடம் இதை கோரிக்கையாகக் கேட்கிறேன்!’ என பேசினார் விஷால்.
பொதுவாக பார்ட் 2 படங்கள் சரியாக போவதில்லை. ஆனாலும் லிங்குசாமி தமிழ் சினிமாவின் மாஸ் & கிளாஸ் கிங் இயக்குனராக அறியப்பட்டவர்! சாக்லேட் பாய் முக மாதவனின் ரன் பட ஷட்டர் சீனும், விஷாலின் சண்டக்கோழி முதல் பாக பஸ் பைட் சீன், காட்டுக்குள் நடக்கும் விஷாலின் மைல் ஸ்டோன் லைப் மாஸ் சீன் கார் பைட் ஆகியவை தமிழ் சினிமாவின் மாஸ் சீன் பட்டியலில் மிகப்பிரதானமானவை!
காதல் காட்சிகளும் ரன், ஜீ, சண்டக்கோழி படங்களில் ரசிக்கக்கூடிய கிளாஸ் காட்சிகளாக இருந்தன. அந்த வகையில்தான் மீண்டும் சண்டக்கோழி 2 மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. விஷால் என்னும் நடிகரின் பாடி லேங்க்வேஜ் முதல் ஸ்டைல் வரை மாற்றியது சண்டக்கோழிதான். அவரை முன்ணனி நடிகர் என்கிற வட்டத்தில் நிறுத்திய படமும்கூட! எனவேதான் இந்தக் கூட்டணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இளையராஜாதான் தன்னுடைய அனைத்து படத்திற்கும் இசையமைக்கவேண்டும் என்பதே லிங்குசாமியின் ஆசை. எனினும் இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா லிங்குசாமியுடன் தொடர்வதை குறிப்பிட்டாக வேண்டும். சண்டக்கோழியின் தாவணிபோட்ட தீபாவளி தந்த மாபெரும் வரவேற்புதான் இதற்கு காரணம் எனலாம்.
சமீப காலமாக படத்தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இருந்ததால் டைரக்க்ஷன் பணியில் லிங்குசாமிக்கு தொய்வு ஏற்பட்டது. அந்த சிறு இடைவெளியில் தன்னை மீண்டும் தயார் படுத்திக்கொண்டு வந்திருக்கிறார். யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ‘கம்பத்துப் பொண்ணு’ மீண்டும் ஒரு தாவணிபோட்ட தீபாவளியை ஞாபகப்படுத்துகிறது. வார்ம் வெல்கம் டு லிங்கு+யுவன்! அக்டோபர் 18-ல் படம் திரையைத் தொடுகிறது.
திராவிட ஜீவா