Advertisment
Presenting Partner
Desktop GIF

விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை - நடிகர் விஷால் பேட்டி

விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை, பிரச்சனையை சொல்வதை விட தீர்வு சொல்ல வேண்டும். இரண்டரை மணி நேரத்தில் விவசாயியின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாது என நடிகர் விஷால் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
actor vishal, vishal lathi movie trailer screening, vishal movie, tamilnadu, coimbatore, farmers problem

நடிகர் விஷால்

விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை, பிரச்சனையை சொல்வதை விட தீர்வு சொல்ல வேண்டும். இரண்டரை மணி நேரத்தில் விவசாயியின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாது என நடிகர் விஷால் தெரிவித்தார்.

Advertisment

விஷால் நடிப்பில் வெளியாக உள்ள "லத்தி" திரைபடத்தின் டிரைலர் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது.

publive-image

டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

முதல்முறையாக கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்துள்ளேன். விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை. பிரச்சனையை சொல்வதை விட தீர்வு சொல்ல வேண்டும்.

உதயநிதி சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். பல வருடங்களுக்கு பின்பு தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என தெரிவித்துள்ளதும், உதயநிதி அமைச்சராகியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அரசியலில் தான் அனைவரும் உள்ளோம்.

publive-image

ஓ .டி. டி. சின்ன படங்களை தான் வாங்குகிறார்கள். டிஜிட்டல் படங்கள் வரும் என கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்து விட்டார். சிறிய முதலீடை வைத்து படம் எடுப்பதை தவிர்க்கலாம். சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. மக்கள் சினிமா தியேட்டருக்கு சென்று பார்ப்பதை தான் நாங்கள் முயற்சி செய்வோம்.

ஓ.டி.டி.பிளாட்பார்ம் ஆல் சினிமா துறைக்கு பாதிப்பு வந்துள்ளது.சினிமாத்துறைக்கு ஜிஎஸ்டி விதித்தது மிக அதிகம். சூதாட்டத்தையும் சினிமா துறையும் ஒரே இலக்காவில் வைத்துள்ளனர்.இலங்கை முகாமில் ப்ரொஜெக்டர் வைத்து இந்தப் படத்தை காட்ட கோரிக்கை வைப்பேன். அவர்களுக்கு திரையிட்டு காட்டுவதில் என்ன தவறு உள்ளது. மிஸ்கின் உடன் தயாரிப்பாளராக பிரச்சனை. எனக்கு நடந்த துரோகத்தை மறக்க மாட்டேன்.

இரண்டரை மணி நேரத்தில் விவசாயியின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாது. இரண்டரை மணி நேரத்தில் பிரச்சினை தான் சொல்ல முடியும் தீர்வு சொல்ல முடியாது. ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் விவசாயிகளுக்கு நான் கொண்டு சேர்ப்பேன்.

திருமணம் குறித்த கேள்விக்கு கட்டிடத்திற்கு பின்பு தான் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன் நடிகர் விஷால் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Vishal Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment