Action Day 6 Box Office Collection: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் சினிமா பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூலைக் குவித்துள்ளது. முதல் இரண்டு நாளில் ரூ.2.70 கோடியை வசூலித்துள்ளது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ‘ஆக்ஷன்’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இதுவரை காமேடி கிங் என்று அறியப்பட்ட இயக்குனர் சுந்தர் சி ஆக்ஷன் படத்தில் அதிரடி ஆக்ஷனில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ள ஆக்ஷன் படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.1.20 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாள் ரூ.1.50 கோடி வசூலித்தது. இதன் மூலம் ஆக்ஷன் படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தப் படத்தில், நடிகர் விஷாலுடன் தமன்னா, ஐஸ்வர்யா லஷ்மி, பழ.கருப்பையா, ராம்கி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஷாலின் அதிரடி ஆக்ஷன், தமன்னாவின் கவர்ச்சி, யோகி பாபுவின் நகைச்சுவை என படம் ரசிகளுக்கு ஒரு கலவையான விருந்தாக அமைந்துள்ளது.
ஆக்ஷன் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். இனிவரும் நாட்களிலும் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.