தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'டெம்பர்'. ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்த இப்படம் மாஸ் மசாலா + செண்டிமெண்ட் என்ற கலவையுடன் வெளியாகி வெற்றிப் பெற்றது. பணம் மட்டுமே குறிக்கோள் என்ற கொள்கையுடன் திமிருடன் வாழும் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை, ஒரு வழக்கு புரட்டிப் போடுகிறது. ஆந்திர ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடித் தீர்த்தனர்.
Advertisment
அதற்கு முன் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த அனைத்துப் படங்களின் ரெக்கார்டுகளையும், வெளியான சில நாட்களிலேயே உடைத்தது இப்படம்.
இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி நடித்து வரும் விஷால், 'இரும்புத் திரை' வெற்றிக்குப் பிறகு, 'சண்டக் கோழி' சறுக்க, இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். வெங்கட் மோகன் இயக்கி வரும் இப்படத்தில் பார்த்திபன், ராஷி கண்ணா, கே எஸ் ரவிக்குமார், பூஜா தேவரியா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
Advertisment
Advertisements
பரபரப்புடன் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியிருக்கும் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.