Advertisment

'என்னை விட பெரிய அனிமல் யாரா இருக்க முடியும்?' - முந்தைய விஷால் பட டிரைலர்களை தூக்கி சாப்பிட்ட 'அயோக்யா'

ayogya trailer

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ayogya Dubbed From Ulle Veliye, parthiban, அயோக்யா, உள்ளே வெளியே, இரா.பார்த்தீபன்

தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘டெம்பர்’. ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்த இப்படம் மாஸ் மசாலா + செண்டிமெண்ட் என்ற கலவையுடன் வெளியாகி வெற்றிப் பெற்றது. பணம் மட்டுமே குறிக்கோள் என்ற கொள்கையுடன் திமிருடன் வாழும் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை, ஒரு வழக்கு எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை. ஆந்திர ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடித் தீர்த்தனர்.

Advertisment

அதற்கு முன் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த அனைத்துப் படங்களின் ரெக்கார்டுகளையும், வெளியான சில நாட்களிலேயே உடைத்தது இப்படம்.

இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி நடித்து வரும் விஷால், ‘இரும்புத் திரை’ வெற்றிக்குப் பிறகு, ‘சண்டக் கோழி’ சறுக்க, இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். வெங்கட் மோகன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பார்த்திபன், ராஷி கண்ணா, கே எஸ் ரவிக்குமார், பூஜா தேவரியா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. 24 மணி நேரத்தில் 2 மில்லியன்ஸ் வியூஸ்-களை தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது. சமீப காலங்களில் வெளியான விஷால் பட டிரைலர்களில், மெகா ரெஸ்பான்ஸ் பெற்ற படம் இது. அதுமட்டுமின்றி, ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் அயோக்யா டிரைலர் உள்ளது.

ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோவாக அறியப்படும் விஷாலுக்கு நீண்ட காலத்திற்கு பிறகு, ஒரு மெகா ஆக்ஷன் படமாக அயோக்யா அடுத்த மாதம் வெளியாகிறது.

Vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment