Advertisment

சரியான நேரத்தில் கை கொடுத்த அஜித்: சென்னை வெள்ளத்தில் ஆமீர்கான் சிக்கியது எப்படி?

சென்னை வெள்ளத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் படகில் மீட்கப்பட்டார். இந்த புகைப்படம் வைரலான நிலையில் ஆமீர்கான் சென்னையில் எப்படி என்று பலரும் குழம்பிப்போய் உள்ளனர். விவரத்தை தெரிஞ்சுக்கோங்க.

author-image
WebDesk
New Update
Vishnu.jpg

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலை, வீடுகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாநகராட்சி, மீட்டுப் படையினர், காவல்துறை, தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் தங்களுக்கு வேண்டிய உதவிகளை கேட்டு சமூக வலைதளமான X மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் சென்னை காரப்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் விஷ்ணு விஷால் நேற்று தனது X பக்கத்தில், "எங்களுடைய பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. என் வீட்டிலும் தண்ணீர் புகுந்துள்ளது. உதவி வேண்டும்" என்று பதிவிட்டார். 

இதையடுத்து சில மணி நேரங்களில் அவர் மீட்புக்கு குழு மூலம் படகில் மீட்கப்பட்டார். அப்போது, அனைவருக்கும்  ஆச்சரியம் அளிக்கும் வகையில், விஷ்ணு விஷால் உடன் பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் படகில் இருந்தார். இந்த புகைப்படம் வைரலான நிலையில் ஆமீர்கான் சென்னையில் எப்படி? என்று பலரும் இணையத்தில் விவாதம் நடத்தினர். 

இந்நிலையில், அவர் தனது தாயார் ஜீனத் ஹுசைனின் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 1 மாத காலமாகவே சென்னையில் தங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் விஷ்ணு விஷால் தங்கியிருக்கும்  காரப்பாக்கம் அதே வில்லாவில் ஆமீர்கானும் தங்கி இருந்த நிலையில் இருவரும் ஒன்றாக மீட்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து, வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆமீர்கான், விஷ்ணு விஷாலை நடிகர் அஜித் நேரில் சென்று நலம் விசாரித்தார். அதோடு அவர்களும் அவர்களின் வில்லாவில் வசிப்பவர்களுக்கு பத்திரமான செல்ல அஜித் வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து உதவி செய்துள்ளார். அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.  

லால் சிங் சத்தா திரைப்படத்தில் நடித்த ஆமீர்கான் அடுத்து தற்போது வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. தாயாரின் சிகிச்சைக்காக சென்னையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment