நம்ம விஷ்ணு விஷாலா இது? : ஜூவாலா கட்டாவுடன் என்னமா பேட்மிடன் விளையாடுகிறார்….

Vishnu vishal – Jwala katta viral video : நடிகர் விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா இணைந்து பேட்மிண்டன் விளையாடும் வீடியோவை விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

vishnu vishal, vennila kabaadi kuzhu, marriage, rajini natraj, kid, alcohol addiction, jwala katta, badminton, video, twitter, vitral
vishnu vishal, vennila kabaadi kuzhu, marriage, rajini natraj, kid, alcohol addiction, jwala katta, badminton, video, twitter, vitral

நடிகர் விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா இணைந்து பேட்மிண்டன் விளையாடும் வீடியோவை விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராட்சசன் படத்திற்கு பிறகு தனக்கு ஏற்பட்ட பிரச்னைகள், விவாகரத்து, மதுவுக்கு அடிமையானது, பின்னர் உடற்பயிற்சி மூலம் அதிலிருந்து மீண்டது குறித்து நீண்ட விளக்க உரை கடிதத்தையும் அதனைத் தொடர்ந்து சிக்ஸ்பேக் டிரான்ஸ்ஃபார்மேஷன் வீடியோவையும் நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் பேட்மிண்டன் விளையாடும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.

மதுவுக்கு அடிமையாகி வாழ்வில் பல விரக்திகளை அடைந்த நடிகர் விஷ்ணு விஷாலுக்கு, இல்லற வாழ்விலும் பல சிக்கல்கள் தொடர, அது விவாகரத்தில் கொண்டு போய் சேர்த்தது. இந்நிலையில், விஷ்ணு விஷாலுக்கு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் புதிய நட்பு ஏற்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் கடந்த ஆறு மாதத்தில் தீவிர ஜிம் பயிற்சியில் ஈடுபட்டு தற்போது சிக்ஸ்பேக் பாடி வைத்துள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த திடீர் மாற்றத்திற்கு ஜுவாலா கட்டாதான் காரணமா? என ரசிகர் ஒருவர் நேரடியாக விஷ்ணு விஷாலிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்ப, அதற்கு விஷ்ணு விஷால் பதில் அளிப்பதற்கு முன்பாக ஜுவாலா கட்டா, அதற்கு விஷ்ணு விஷால் மட்டும் தான் காரணம் என பதிலளித்தார்.

மேலும், விஷ்ணு விஷால், தனது புதிய படமான எஃப்.ஐ.ஆர் படத்துக்காகத் தான் இப்படி சிக்ஸ் பேக் வைத்து தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் விரைவில் ரிலீசாகவுள்ளதாகவும் விஷ்ணு விஷால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vishnu vishal jwala katta badminton video viral twitter video

Next Story
பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை – போலீஸ் விசாரணைTV actress Sejal Sharma commits suicide in Mumbai - பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை - திரையுலகம் அதிர்ச்சி சினிமா செய்திகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com