scorecardresearch

பேட்மிண்டன் வீராங்கனையுடன் விஷ்ணு விஷாலின் நெருக்கமான செல்ஃபி – நட்பா? காதலா? என ரசிகர்கள் கேள்வி!

சேத்தன் ஆனந்தை 2005-ல் மணம் புரிந்து 2011-ல் விவாகரத்தானவர்.

பேட்மிண்டன் வீராங்கனையுடன் விஷ்ணு விஷாலின் நெருக்கமான செல்ஃபி – நட்பா? காதலா? என ரசிகர்கள் கேள்வி!

தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இவரும் இவரது காதல் மனைவி ரஜினி நட்ராஜும் கடந்தாண்டு விவாகரத்து செய்துக் கொண்டனர். அதற்கான காரணத்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்க்காணலில் தெரிவித்தார் விஷ்ணு.

ஆன் ஸ்கிரீனில் ரொமான்ஸ் நன்றாக வர வேண்டும் என்பதற்கா தான் நடிகைகளிடம் ஃப்ரெண்ட்லியாக பழகியதை, தன் மனைவி தவறாக எடுத்துக் கொண்டார் என அதில் கூறியிருந்தார்.

தற்போது ’ஜெகஜால கில்லாடி, காடன், பில்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபீக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர். இருவரும் நெருக்கமாக இருக்கும் அந்தப் படத்தை ட்விட்டர் பக்கத்தில் முகப்பு ட்வீட்டாகவும் வைத்திருக்கிறார் விஷ்ணு.

இதைப் பார்த்த ரசிகர்கள், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறீர்களா? என்ற வண்ணம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலரோ, இவருக்காகத் தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்தீர்களா என்றும் கேட்டு வருகிறார்கள்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின், ‘பயோபிக் ஷூட்டிங்கா’ எனக் கேட்டிருந்தார். அதற்கு, ‘நாம் சந்திப்போம்’ என பதிலளித்திருக்கிறார் விஷ்ணு.

இந்நிலையில், விஷ்ணுவும், ஜுவாலாவும் 6 மாதங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும் இன்னும் முறைப்படி திருமணம் நிச்சயிக்கப்படவில்லை எனவும் கூறுகிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.

இதற்கிடையே விஷ்ணுவை விட மூத்தவரான ஜுவாலா பேட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்தை 2005-ல் மணம் புரிந்து 2011-ல் விவாகரத்தானவர். இந்த விவாகரத்துக்குக் காரணம் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனுடன் ஜுவாலா கொண்டிருந்த காதல் என அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vishnu vishal selfie with jwala gutta