30 லிட்டர் தாய்ப்பால்... தானமாக கொடுத்த நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி; ஏன் தெரியுமா?

நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவாலா கட்டா தனது தாய் பாலை தானம் செய்துள்ளது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவாலா கட்டா தனது தாய் பாலை தானம் செய்துள்ளது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
vishnu

30 லிட்டர் தாய்ப்பால்... தானமாக கொடுத்த நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி; ஏன் தெரியுமா?

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதுவே இயக்குநர் சுசீந்திரனின் முதல் படம் ஆகும். இதைத்தொடர்ந்து,  குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி, லால் சலாம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து நடிகர் விஷ்ணு விஷால், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.  

Advertisment

தற்போது இவர் ராட்சசன் 2 , கட்டா குஸ்தி 2 , ஆர்யன் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2010-ம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2021-ம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை,   திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. பாலிவுட் நடிகர் அமீர்கான் அந்த குழந்தைக்கு 'மிரா' என பெயர் சூட்டினார். இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவாலா கட்டா தனது தாய்ப்பாலை தான, அளிக்க முன் வந்துள்ளார். அதாவது, சென்னை அரசு மருத்துவமனையில் தினமும் 600 மில்லி தாய்பாலை அவர் தானம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

பால் சுரக்காத மற்றும் தாய் இன்றி ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு தாயாக உதவும் வகையில் ஜூவாலா கட்டா இந்த முன்னெடுப்பை தொடர்ந்துள்ளார். இதுவரை அவர்  சுமார் 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஜூவாலா தாயாகி உள்ளார்.

Advertisment
Advertisements

ஜூவாலா கட்டா மட்டுமல்லாமல் பலரும் தாய் பாலை தானம் செய்து வருகின்றனர். ஜூவாலாவின் இந்த செயல் மேலும் பல பெண்களை தாய் பாலை தானம் செய்ய ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. ஜூவாலா கட்டா, 2010 வரை 14 முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார். 

2011- ல்  லண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது இந்தியாவின் முதல் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் என்று கூறப்படுகிறது.

Vishnu Vishal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: