/indian-express-tamil/media/media_files/2025/08/26/arunachalam-9-2025-08-26-15-59-07.jpg)
புகைப்படம் - எக்ஸ்
'அருணாச்சலம்' திரைப்படத்தின் கதை விவாதத்தின்போது நடந்த ஒரு நகைச்சுவையை விசு இண்டியாக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 'அருணாச்சலம்' திரைப்படம் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று வெளியானது. ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, விசு, மனோரமா போன்றோர் இதில் நடித்திருந்தனர். பிரபல இயக்குனர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். நகைச்சுவை எழுத்தாளர் கிரேஸி மோகன் இந்தப் படத்தின் உரையாடலை எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் கதை, ஒரு மாதத்திற்குள், அந்த 3,000 கோடி ரூபாயையும் எந்தவிதமான வருமானமும் ஈட்டாமல், முற்றிலும் செலவு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, மீதமுள்ள 30,000 கோடி ரூபாய் சொத்து அவருக்குக் கிடைக்கும். இந்த சவாலை ரஜினிகாந்த் எதிர்கொள்ளும் ஒரு மனிதனின் கதையாகும். அந்தப் படத்தில் விசுவின் கதாபாத்திரம், ஒரு கோடீஸ்வரனின் வக்கீலாகவும், ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை அவனது மகன் என்று கண்டறியும் ஒருவராக அமைக்கப்பட்டிருந்தது.
படத்தின் உரையாடலை எழுதிய கிரேஸி மோகன், விசுவிடம் கதை சொன்னபோது, "கதைப்படி, நீங்கள் ஒரு 'கேனை'" என்று கூறினார். இதைக் கேட்ட ரஜினிகாந்த் ஆச்சரியத்துடன், "ஒரு மூத்த நடிகரான விசுவை எப்படி இப்படிச் சொல்லலாம்?" என்று கேட்டார். அதற்கு கிரேஸி மோகன், "அவரிடமே நேராகக் கேட்டுவிடுகிறேன்" என்று சொன்னார்.
கதையின்படி, 3,000 கோடி ரூபாய் சொத்து உள்ள ஒரு கோடீஸ்வரன் இறந்துவிடுகிறார். அந்தச் சொத்தை அவனது மகனிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அந்த மகன் எங்கே இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. அந்த மகனைத் தேடிச் செல்லும் ஒருவருக்கு, 'கேனை' போலவே இருக்க முடியும் என்று கிரேஸி மோகன் விளக்கினார். விசுவும் அதை ஏற்றுக்கொண்டார்.
கடைசியாக, ரஜினியிடம் கிரேஸி மோகன் ஒரு நகைச்சுவையான கேள்வியைக் கேட்டார். "மொத்தமுள்ள ஐந்து கதாபாத்திரங்களில் நான்கு பேர் சொத்தை பங்கு போட ஒத்துக்கொண்டார்கள். ஐந்தாவது கதாபாத்திரமாக நீங்களும் அதை ஏற்றுக்கொண்டால், 3,000 கோடியை ஐந்தால் வகுத்தால் 600 கோடி கிடைக்கும். அந்த 600 கோடியுடன் செட்டில் ஆகிவிடலாம்." ஆனால் தேடி அலைந்தால் அவர் கேனைதானே என்றார்
இதை ரஜினி ஏன் என்று கேட்டதற்கு, பணம் கிடைத்த பிறகும் அருணாச்சலத்தைத் தேடி அலைந்துகொண்டிருப்பார் என்பதால்தான் என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இப்படியான கதைக்களத்துடன் இருக்கும் இந்த படத்தின் வெற்றிக்கு ரஜினிகாந்தின் நடிப்பு, சுந்தர்.சி-யின் இயக்கம், மற்றும் கிரேஸி மோகனின் நகைச்சுவை நிறைந்த வசனங்கள் முக்கிய காரணமாக அமைந்தன. இந்தப் படம் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.