விஸ்வரூபம் 2 படத்தை பிக் பாஸில் வெளியிட முடிவு எடுத்து விட்டாரா கமல்?

கமல் விஸ்வரூபம் படத்தின் ப்ரமோஷன் வேலைக்காக பயன்படுத்துவதாக  நெட்டிசன்கள்

கமல்ஹாசன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் 2 ஆவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டும் நடிகர் கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் தான் விஸ்வரூபம். இந்த படத்தை வெளியிடுவதற்கு கமல்ஹாசன் சந்தித்த இன்னல்கள் ஏராளம். ஒருவழியாக பல்வேறு தடைகளை தாண்டி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

படத்தின் நீளம் பெரிது என்பதால் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்திருந்தது. இந்நிலையில் விஸ்வரூபம் -2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடிகர் கமல் முடித்து விட்டு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் 2 நிகழ்சிக்கு தொகுப்பாளராக சென்றார்.

பிக் பாஸ் முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே ரசிகர்களிடம்   ஆவல் ஒற்றிக் கொண்டது.  ஆனால்  சென்ற சீசனை போல்  இந்த சீசன்  விறுவிறுப்பாக  செல்லவில்லை  என்பது மக்களின் கருத்தாக உள்ளது.  அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை  கமல் விஸ்வரூபம் படத்தின் ப்ரமோஷன் வேலைக்காக பயன்படுத்துவதாக  நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன.

இதற்கு காரணம்,  விஸ்வரூபம் படத்தின் பாடல்களை ஸ்ருதிஹாசன்   மேடையில் பாடி காட்டினார்.  கடந்த சனிக்கிழமை எப்பிசோடில்  விஸ்வரூபம் படத்தின் குழு  நடிகை ஆண்ட்ரியா,  பூஜாக்குமார்,  இசையமைப்பாளர் ஜிப்ராயின் ஆகியோர்  வீட்டிற்கு சென்று இருந்தனர். அதனைத் தொடர்ந்த அகம் டிவி வழியே  விஸ்வரூபம் 2 டிரெய்லர் போட்டுக் காட்டப்பட்டது. இதனைப் பார்த்து போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையெல்லாம் வைத்து பார்த்தால்,   ஆகஸ்ட் 10 ஆம் தேதி விஸ்வரூபம் 2 படம் திரையரங்குகளில் வெளியாவதற்குள் பிக்பாஸ் இல்லத்தில் வெளியாகி விடுமோ? என்று நெட்டிசன்கள்  வழக்கம் போல் கலாய்த்து வருகின்றனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close