/tamil-ie/media/media_files/uploads/2018/06/1111-23.jpg)
நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டும் நடிகர் கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் தான் விஸ்வரூபம். இந்த படத்தை வெளியிடுவதற்கு கமல்ஹாசன் சந்தித்த இன்னல்கள் ஏராளம். ஒருவழியாக பல்வேறு தடைகளை தாண்டி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
படத்தின் நீளம் பெரிது என்பதால் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்திருந்தது. இந்நிலையில் விஸ்வரூபம் -2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடிகர் கமல் சமீபத்தில் தொடங்கி முடித்தார். சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமலுடன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
Wow! People, thanks for so much love. I am tweetilated and humbled with teewtitude.???????? https://t.co/FIVo6feDDB
— Kamal Haasan (@ikamalhaasan) 8 June 2018
அதனைத்தொடர்ந்து, விஸ்வரூபம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. தற்போது இந்த திரைப்படம் வரும் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரீலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி ட்ரெய்லரை ஆமிர் கானும், தமிழ் ட்ரெய்லரை ஸ்ருதி ஹாசனும், தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிடுவது கூடுதல் தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.