விஸ்வாசம் ரிலீஸ் முன்னிட்டு அஜித் ரசிகர்கள் அவருக்கு 200 அடி கட் அவுட் வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். விஜய் ரசிகர்களின் சாதனையை முறியடிக்க புதிய முயற்சி.
இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஸ்பெஷலாக பேட்ட படத்துடன் மோத இருக்கும் இந்த படத்தை வரவேற்க தல ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.
விஸ்வாசம் கட் அவுட்
நீண்ட இடைவேளிக்குப் பிறகு தல அஜித்தின் படம் வெளியாவதால், அவரின் ரசிகர்கள் எல்லோரும் ஃபுல் சார்ஜ் போட்ட போன் பேட்டரி போல சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். சர்கார் படத்துக்காக விஜய் ரசிகர்கள் அவருக்கு 175 அடி கட் அவுட் வைத்து சாதனை படைத்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/banner-1.jpg)
அந்த சாதனையை முறியடிக்க தற்போது தல ரசிகர்கள் தீவிர வேலையில் இறங்கியிருக்கிறார்கள். அஜித்துக்கு 20 அடி அகலம் மற்றும் 200 அடி உயரம் கட் அவுட் வைத்து விஜய் ரசிகர்களின் சாதனையை காலி செய்வோம் என சபதம் எடுத்திருக்கிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/banner-2.jpg)
இதற்கான பணிகளை திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு நிலத்தில் தொடங்கியிருக்கிறார்கள். திருச்செந்தூரில் பணியில் இறங்கியிருக்கும் ரசிகர்களுக்கு உலகில் உள்ள எல்லா தல வெறியர்களும் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.