Advertisment

Viswasam Box Office Collection Day 1: விஸ்வாசம் வசூல் எப்படி? லேட்டஸ்ட் அப்டேட்

Viswasam Total Collection Updates: தமிழ்நாட்டில் 520 ஸ்க்ரீன்களில் விஸ்வாசம் படமும், 470 ஸ்க்ரீன்களில் பேட்ட படமும் ரிலீஸ் ஆகியிருக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viswasam Box Office Collection, விஸ்வாசம் படம் வசூல்

Viswasam Box Office Collection, விஸ்வாசம் படம் வசூல்

Ajithkumar's  Viswasam Box Office Collection Day 1: விஸ்வாசம் படம், வசூலில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைக்கும் என தகவல்கள் வந்தபடி இருக்கின்றன. பாசிட்டிவான ரிவ்வியூவை தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் தொடர்பாகவும் வரும் தகவல்கள் அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertisment

தல அஜீத் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக விஸ்வாசம் இன்று (ஜனவரி 10) வெளியானது. ரஜினிகாந்த் படம் வெளியாகிற நாளில் முதல் முறையாக அஜீத்குமாரின் படம் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்கள் போதுமான எண்ணிக்கையில் கிடைக்குமா? வசூல் ஆகுமா? என்கிற கேள்விகள் பலரால் முன்வைக்கப்பட்டன.

இந்தச் சூழலில் இன்று விஸ்வாசம் படம் ரிலீஸான சிறிது நேரத்திலேயே பாசிட்டிவ் ரிவ்வியூக்கள் வர ஆரம்பித்தன. மொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சிப்படுத்தும் படமாக விஸ்வாசம் அமைந்திருப்பதாக பலரும் கூறினர். திரையுலக பிரபலங்கள் பலரும் விஸ்வாசத்தை புகழ்ந்து கருத்து கூறியிருக்கிறார்கள்.

Viswasam Box Office Collection Day 1 Updates:  விஸ்வாசம் முதல் நாள் வசூல் நிலவரம்

படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்தும் பாசிட்டிவான தகவல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. அது தொடர்பான அப்டேட்களை இங்கு காணலால்.

உலகம் முழுவதும் சுமார் 2000 ஸ்கிரீன்களின் தல அஜீத்தின் விஸ்வாசம் வெளியாகியிருக்கிறது. பேட்ட, விஸ்வாசன்ம் இடையிலான வசூல் மோதல் குறித்து முழு நிலவரம் தெரிய சற்று அவகாசம் தேவை என்றாலும், விஸ்வாசம் முந்தைய சில சாதனைகளை தகர்ப்பது நிச்சயம் என்பதை மட்டும் சினிமா உலகப் பிரமுகர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் என்கிற டிவிட்டர் முகவரியில் எழுதி வரும் விமர்சகர் ஒருவர், ‘தமிழ்நாட்டில் விஸ்வாசம், பேட்ட ஆகிய இரு படங்களும் ரிலீஸ் ஆகிய தியேட்டர்களில் முழுமையாக இருக்கைகள் நிரம்பியிருந்தால், விஸ்வாசம் படத்தின் முதல் நாள் வசூல் 25 கோடியாகவும், பேட்ட படத்தின் வசூல் 18 கோடியாகவும் இருக்கும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்நாள் தியேட்டர்களில் எங்கும் இருக்கை காலி இல்லை என்பது அனைவரும் அறிந்த ரகசியம்தான். பேட்ட படத்தைவிட, விஸ்வாசம் கூடுதல் தியேட்டர்களில் திரையிடப்பட்டிருப்பதாக வெளிவரும் தகவல்கள் அடிப்படையில் இந்தக் கணிப்பை பார்க்க முடிகிறது.

பாக்ஸ் ஆபீஸ் இந்தியா என்கிற ட்விட்டர் கணக்கில் வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் 520 ஸ்க்ரீன்களில் விஸ்வாசம் படமும், 470 ஸ்க்ரீன்களில் பேட்ட படமும் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. கர்நாடகாவில் பேட்ட 160, விஸ்வாசம் 110 ஸ்க்ரீன்களில் வெளியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவில் விஸ்வாசம் 203 ஸ்க்ரீன்களிலும், பேட்ட 170 பிளஸ் ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆனதாக கூறப்பட்டிருக்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கை, வசூல் நிலவரத்தில் தாக்கத்தை உருவாக்கும். அடுத்தடுத்து வருகிற தகவல்கள் அடிப்படையில் முதல் நாள் கலெக்‌ஷன் பற்றிய உறுதியான தகவல்கள் தெரிய வரும்.

 

Happy Pongal Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment