/tamil-ie/media/media_files/uploads/2018/12/eswarirao..jpg)
Eswarirao With Ajith, நடிகை ஈஸ்வரிராவ், விஸ்வாசம்
Eswarirao With Viswasam Ajith: பாலுமகேந்திரா ஸ்பெஷல் ப்ளாக் பியூட்டி ஹீரோயின்களில் குறிப்பிடத் தகுந்தவர் ராமன் அப்துல்லா புகழ் ஈஸ்வரிராவ். காலாவில் ரஜினிக்கு ஜோடியாகி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்தார்.
காலா படம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும், காலா படத்தில் ஈஸ்வரிராவின் செல்வி கதாபாத்திரம் அவருடைய லைப் டைம் லைக் பட்டியலில் நிச்சயம் இருக்கும். காலாவை தொடர்ந்து பல படங்களில் அவருக்கு அழைப்பு வந்தாலும் அவர் தேர்ந்தெடுத்த படம், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் அஜித்தின் விஸ்வாசம்!
இதில் ஈஸ்வரிராவின் கதாபாத்திரம் நிச்சயம் ஈர்க்கும் என்றும் கூறுகிறார்கள் படக்குழுவினர். விஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ், வயதான தோற்றத்தில் வரும் அஜித்துக்கு ஜோடியா? என்று கேட்டால், ‘படம் பாருங்கள்’ என்கிறார்கள். இதில் இளம் வயது அஜீத்துக்கு ஜோடி நயன்தாரா என்பதை சொல்லத் தேவையில்லை.
வியாபாரத்திற்கு வந்து விட்டால் விலையை சொல்லித்தான் ஆகவேண்டும் என்பது சினிமாவிற்கும் பொருந்தும். பார்ப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.