/tamil-ie/media/media_files/uploads/2018/12/Viswasam-album.jpg)
Viswasam album
Ajith-Nayanthara Starrer Viswasam Album Released Today : எவ்வித சத்தமும் இல்லாமல், ஆடம்பரமும் இல்லாமல் இன்று வெளியாகியுள்ளது அஜித்தின் விஸ்வாசம் பாடல்கள்.
தல அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்கு மற்றும் வேட்டி கட்டு பாடல்கள் வெளியாகி யூடியூப்-ல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டை சர்பிரைசாக இறக்கியது படக்குழு.
Viswasam Album release : விஸ்வாசம் பாடல்கள் ரிலீஸ் இன்று
விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் ஆடியோ உரிமை பெற்றுள்ள லஹரி நிறுவனம் தனது டுவிட்டரில் அறிவித்தது. அதன்படி, அப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழா எதுவும் இன்றி வழக்கம்போல் இணையதளத்தில் விஸ்வாசம் பாடல்கள் வெளியாகியுள்ளது.
#Viswasam Album from today. ????????@directorsiva@SureshChandraa@SathyaJyothi_@vetrivisuals@immancomposer@AntonyLRuben@dhilipaction@kjr_studios@AandPgroups@LahariMusic@gaana@DoneChannel1pic.twitter.com/J5J1tvrQAn
— Lahari Music (@LahariMusic) 15 December 2018
அட்ச்சி தூக்கு, வேட்டிகட்டு பாடல்கள் உட்பட கண்ணான கண்ணே, வானே வானே, டங்கா, டங்கா என மொத்தம் ஐந்து பாடல்களும், Rise Up என்கிற தீம் மியூசிக்கும் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளது.
படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசிக்க இங்கே க்ளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.