Advertisment
Presenting Partner
Desktop GIF

Viswasam vs Tamilrockers: தல படத்திற்கு எத்தனை பிரச்னை?

Viswasam full movie download banned: நீதிமன்றங்கள் தடை விதிப்பதும், தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத் தனமாக படத்தை வெளியிடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viswasam full movie HD Print download, தமிழ் ராக்கர்ஸ், விஸ்வாசம்

Viswasam full movie HD Print download, தமிழ் ராக்கர்ஸ், விஸ்வாசம்

Viswasam full movie download in tamilrockers banned By Madras high court: ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆவதும் ஒரு பிரசவம் போலத்தான்! ஃபைனான்ஸ் பிரச்னை, தமிழ் ராக்கர்ஸ் பிரச்னை என சொல்லி மாளாது. தல அஜீத் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக தியேட்டர்களை அலங்கரிக்கும் விஸ்வாசம் படமும் இதற்கு விதிவிலக்கு அல்ல! பல்லாயிரக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வியர்வையாலும் ரத்தத்தாலும் உருவாகும் படங்களின் வசூலை குறுக்கு வழியில் சில இணையதளங்கள் திருடுவதை ஏற்க முடியாது. இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை.

Advertisment

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் தயாரான பொங்கல் ரிலீஸ் படம் விஸ்வாசம். ஜனவரி 10 ஆம் தேதி முதல் இந்தப் படம் தியேட்டர்களை அலங்கரிக்கிறது. இந்த படத்தின் கோவை, கோவை புறநகர், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் விநியோகஸ்த உரிமையை சாய்பாபா என்பவர் பெற்றிருந்தார்.

மேலும் படிக்க - Viswasam movie review and release LIVE UPDATES: குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் மாஸ் படம்

இந்த படத்திற்காக 78 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருந்ததாகவும் அதில் இன்னும் 35 லட்சம் ரூபாய் திருப்பி தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை கோரி சினிமா பைனான்சியர் உமாபதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்தை சம்மந்தப்பட்ட பகுதியில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

Tamilrockers, Viswasam Full Movie download, விஸ்வாசம், தமிழ் ராக்கர்ஸ் Viswasam vs Tamilrockers: விஸ்வாசம் ரிலீஸ் பிரச்னை

Viswasam vs Tamilrockers: இன்னொரு மிரட்டல் தமிழ் ராக்கர்ஸ்

இதனையடுத்து தடையை நீக்க கோரி சம்மந்தப்பட்ட விநியோகஸ்தர் சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில்,

பாக்கி தொகையில் 35 லட்சம் ரூபாயில் 20 லட்சத்தை கேட்பு காசோலை (டி.டி) தாக்கல் செய்வதாகவும், மீதமுள்ள 15 லட்சத்தை 4 வாரங்களில் அளிப்பதாக விநியோகஸ்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஐயன் சுப்பிரமணியன் உத்தரவாதம் அளித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி எம்.சுந்தர், மனுதாரர் உத்தரவாதத்தை ஏற்பதாகவும், படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும் உத்தரவிட்டார். மீதமுள்ள 15 லட்சம் ரூபாய் தொகையை பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்தார்.

இதே போல் கோவை, திருப்பூர் விநியோகஸ்த உரிமை பெற்றுள்ள சாய் பாபா என்பவர் தங்கள் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 25 ரூபாய் கடன் பெற்றதாகவும், எனவே கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ஜி.கே.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அவரின் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். இந்த முறையை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இப்படி கடைசி நேரம் வரை ஃபைனாஸ்ஸ் பிரச்னை ஒரு மிரட்டல் என்றால், இன்னொரு மிரட்டல் தமிழ் ராக்கர்ஸ் மூலமாக! ஏற்கனவே விஸ்வாசம் படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்பட திருட்டு இணையதளங்களில் வெளியிட தடை கோரி படக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் 3000-க்கும் மேற்பட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும் ஒவ்வொரு முறையும் இப்படி நீதிமன்றங்கள் தடை விதிப்பதும், தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத் தனமாக படத்தை வெளியிடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் தனது முகவரியை மாற்றிக் கொண்டு வெளியிடுவது எவ்வளவு குற்றமோ, அதே அளவு திருட்டுத்தனமாக டவுண்லோடு செய்து பார்ப்பதும் குற்றம்தான்!

படத்தை டவுண்லோடு செய்வதும் தடை செய்யப்பட்டிருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வியர்வையாலும் ரத்தத்தாலும் உருவாகும் படங்களின் வசூலை குறுக்கு வழியில் சில இணையதளங்கள் திருடுவதை ஏற்க முடியாது. இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை.

 

Ajith Madras Rockers Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment