Viswasam Making Video new record : சிறுத்தை சிவா இயக்கத்தில் இணையத்தையே அடிச்சு தூக்கி வருகிறது விஸ்வாசம் மேக்கிங் வீடியோ.
Advertisment
சிறுத்தை சிவா இயக்கத்தில் 4வது முறையாக தல அஜித் நடித்த படம் தான் விஸ்வாசம். இப்படத்தில் நயன்தாரா, குழந்தை நட்சத்திரம் அனிக்கா, தம்பி ராமய்யா, ரோபோ சங்கர், விவேக், கோவை சரளா மற்றும் பலர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
Viswasam Making Video : விஸ்வாசம் மேக்கிங் வீடியோ
குடும்பக் கதையை மையமாகக் கொண்டு ஜனவரி 10ம் தேதி பேட்ட படத்திர்கு போட்டியாக களமிறங்கியது. இப்படம், வெளியான சில நாட்களிலேயே வசூலில் பட்டையை கிளப்பியது. அப்பா - மகள் உறவை செதுக்கியிருக்கிறார் சிவா.
Advertisment
Advertisements
இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வீடியோ நேற்று வெளியானது. படத்தைப் போலவே இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் யூடியூப்பில் சாதனை படைத்திருக்கிறது. வெளியான வெறும் 18 மணி நேரத்திலேயே, இதனை 7 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோ இன்ரு இரவு அல்லது நாளைக்குள் நிச்சயம் 10 லட்சத்தை தாண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.