Viswasam Motion Poster : தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் பொங்கல் ரிலீஸ் படம் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் இதுவரை வெளியான எல்லா மோஷன் போஸ்டர் சாதனைகளையும் முறியடித்துள்ளது.
Advertisment
நடிகர் அஜித் - இயக்குநர் சிவாவின் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்க்கும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் வயதான அஜித்துக்கு ஜோடியாகா காலா ஈஸ்வரியும் இளைய அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
Viswasam Motion Poster : விஸ்வாசம் மோஷன் போஸ்டர் சாதனை
விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகு எவ்வித அப்டேட் இல்லாமல் போனதால் தல ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக பிரேக்கிங் நியூஸ் போல் ரிலீஸ் ஆனது விஸ்வாசம் மோஷன் போஸ்டர்.
Advertisment
Advertisements
பொங்கல் ரிலீஸை உறுதி செய்து வெளியான இந்த மோஷன் போஸ்டர், இதுவரை வெளியான எல்லா மோஷன் போஸ்டர்களின் சாதனையையும் முறியடித்துள்ளது.
இப்படத்தின் மோஷன் போஸ்டர், வெறும் 13 மணி நேரத்திலேயே சுமா 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. சத்தமே இல்லாமல் ரிலீஸ் ஆனாலும் தல படம் என்றால் வேற லெவல் தான் என்ற உற்சாகத்தில் சுற்ரி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம் படத்தில் 'தூக்குதுரை' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார். இவரின் ஓப்பனிங் பாடலில் 500 நடனக் கலைஞர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. வேட்டி கட்டு என்ற இந்த பாடலின் ரிலீஸுக்கு தல ரசிகர்கள் பட்டாளமே செம்ம வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.