Advertisment
Presenting Partner
Desktop GIF

விஸ்வாசம் படத்திற்கு கிடைத்த போனஸ்: ஒரு போலீஸ் அதிகாரியே பாராட்டுகிறார்... ஏன் என்று பாருங்கள்

Arjun Saravanan IPS: விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viswasam Movie Appreciated By IPS Officer, விஸ்வாசம், தல அஜீத்

Viswasam Movie Appreciated By IPS Officer, விஸ்வாசம், தல அஜீத்

Arjun Saravanan IPS Appreciates Viswasam Movie: விஸ்வாசம் படத்தை போலீஸ் அதிகாரி ஒருவர் பாராட்டித் தள்ளியிருப்பதுதான் லேட்டஸ்ட் வைரல்! ஏன்? எதற்காக பாராட்டினார்? என தெரிந்து கொள்ளவேண்டாமா?

Advertisment

போலீஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன், சென்னையில் துணை ஆணையராக பணிபுரிகிறார். இளைஞர்களுக்கு அவ்வப்போது பிரயோஜனமான வழிகாட்டுதல்களை தனது முகநூல் பக்கத்தில் கூறுவது, சினிமாவில் ஒரு நல்ல விஷயத்தைப் பார்த்தாலும் தயங்காமல் அதை பாராட்டி பதிவிடுவது இவரது இயல்பு!

லேட்டஸ்டாக தல அஜீத், நயன்தாரா நடிப்பில் கடந்த 10-ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தை பாராட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அர்ஜூன் சரவணன். எதற்காக பாராட்டினார். இதோ அவரது பதிவை அவரது வார்த்தைகளிலேயே படியுங்கள்.

‘A leader is someone who demonstrates what’s possible.

சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .

படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.

கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது.

பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.

விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் .

என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

தலைமையிடம்

சென்னை மாநகரம்’ என தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமாவில் கதைக்கும் காட்சி அமைப்புகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் கூட மக்களுக்கு நல்ல மெசேஜ்களை சொல்ல முடியும் என்பதற்கு விஸ்வாசம் படத்தின் மேற்படி காட்சிகள் உதாரணம். காவல்துறை அதிகாரி ஒருவரே அதை பாராட்டியிருப்பது, இது போன்று ஆக்கபூர்வமாக காட்சிகளை அமைப்பவர்களுக்கு உந்துதலாக இருக்கும்.

பேட்ட படத்திற்கு போட்டியாக களம் இறங்கி நல்ல வசூலை எட்டியிருக்கும் விஸ்வாசம் படத்திற்கு போலீஸ் அதிகாரி ஒருவரின் பாராட்டு போனஸ்தான்!

 

Tamil Cinema Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment