4வது முறையாக சிறுத்தை சிவா மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் படம் நீளம் அறிவிப்பால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்துடன் இனைந்து வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பு படமாக வெளியாகிறது. இந்த படத்திற்காக டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரத்திலேயே பெரும்பாலான தியேட்டர்களில் எல்லா டிக்கெட்டுகளும் விற்பனையாகி தீர்ந்தது.
விஸ்வாசம் படம் நீளம்
இத்துடன் மற்றொரு நல்ல செய்தியும் வெளியாகியுள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தின் நீளம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நீளம் அளவாக இருப்பதால், கூடுதலாக ஒரு காட்சி திரையிடும் வாய்ப்பு இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இந்த நிஜமாகவே பொங்கல் ஸ்பெஷலாக அமைகிறது.
#ViswasamUpdates : The movie running time is 152 minutes will releasing without CUTS#Viswasam#DMY#DMYViswasamWorldwide#DMYThalaViswasam#LetsStartTheAdaavadiPongal pic.twitter.com/yoDoLIjYwA
— DMY Creation (@DmyCreation) 4 January 2019
படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை விட படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வாசம் படத்துக்கு தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.