ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அப்பா அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
விஸ்வாசம் அப்பா அஜித் லுக்:
அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது படமாக ‘விஸ்வாசம்’ தயாராகி வருகிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய மூன்று படங்களில், கடைசியாக வெளியான ‘விவேகம்’ தோல்வியைத் தழுவியது. எனவே, ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பிலேயே அடுத்த படத்திலும் நடிக்கிறார் அஜித்.
இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருமடங்காக இருப்பது கோலிவுட் வைர அறிந்த ஒன்று. சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ் அண்ட் கிளாசாக பல சாதனைகளை செய்தது.
அஜித் ரசிகர்கள் நாளுக்கு நாள் படத்தின் அப்டேட் குறித்து புது புது தகவல்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். விஸ்வாசம் படத்தில் அப்பா – மகன் என இரண்டு ரோல்கள் இருப்பது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அனைவருக்கும் தெளிவானது.
அப்பா அஜித்திற்கு ஜோடி, காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்து அசத்தி இருந்த ஈஸ்வரி ராவ். மகன் அஜித்தின் காதலியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படி ரசிகர்களை கவரும் பல சுவாரசியங்கள் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்று இருப்பது படம் குறித்த எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
#Viswasam Shooting Spot !!! pic.twitter.com/GVtm2Ka23M
— South Tracker (@SouthTracker) 18 September 2018
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டோடிங் ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.