Advertisment

விஸ்வாசம் VS பேட்ட : இந்த பொங்கல் வசூல் ரஜினிக்கா அஜித்துக்கா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VISWASAM, விஸ்வாசம்

VISWASAM, விஸ்வாசம்

ரஜினி நடிக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இயக்குநர் சிவா- அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

விஸ்வாசம் படம் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

சமீபத்தில் இந்தப் படத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகரான ரவி அவானா இணைந்தார். இதைத்தொடர்ந்து படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் `தூக்கு துரை' என்றும் தகவல்கள் வெளியாகியது.

Viswasam poster, விஸ்வாசம்

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் மிகப்பெரிய ஆடிட்டோரியம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பை முடித்த பின்பு மும்பையில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.

கொண்டாட்டத்தை துவக்கிய தல ரசிகர்கள்.. விஸ்வாசத்தில் அப்பா அஜித் லுக்!

ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் படப்பிடிப்பு வேலைகள் முடிவடையாததால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரஜினி நடிக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Rajinikanth Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment