/tamil-ie/media/media_files/uploads/2019/01/Viswasam-Box-Office-Collection.jpg)
viswasam
viswasam : தல அஜித், நயன்தாரா நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம், வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாது, வெள்ளித்திரையில் சாதனை படைத்து அசத்தியுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் இணைந்த படம் விஸ்வாசம். பெற்றோர் - மகள் உறவை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அஜித், நயன்தாரா முக்கிய வேடத்திலும், தம்பி ராமைய்யா, யோகி பாபு, ஜகபதிபாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், விஸ்வாசம் படமும், இந்தாண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியானது. இரண்டு படங்களுக்கும் அமோக வரவேற்பு இருந்ததால், இருதரப்பு ரசிகர்களும் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருந்தனர். வசூல் நிலவரங்களையும் தங்களுக்கு தோதாக, சமூகஊடகங்களில் போட்டி போட்டுக்கொண்டு பரப்பிக்கொண்டிருந்தனர்.
விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளரே வெளிப்படையாக படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்டார். அதன்படி, படம் தமிழகத்தில் ரூ. 125 கோடி அளவிற்கு வசூல் செய்துள்ளதாகவும், இதன்மூலம் விநியோகஸ்தர்களுக்கு ரூ. 75 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டையொட்டி, பேட்ட படம் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி, விஸ்வாசம் படம், டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த படத்தை, டிவியில் 1 கோடியே 81 லட்சத்து 43 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். டிவியில் அதிகம் பேர் பார்த்த படம் என்ற சாதனையை விஸ்வாசம் நிகழ்த்தியுள்ளது.
விஸ்வாசம் - 1,81,43000
பிச்சைக்காரன் - 1,76,96000
பாகுபலி 2 - 1,70,70000
சர்கார் - 1,69,06000
சர்கார், பாகுபலி, பிச்சைக்காரன் படங்களின் டிஆர்பி ரேட்டிங் சாதனைகளை விஸ்வாசம் முறியடித்துள்ளது.இது அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகத்திற்குள்ளாக்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.