பேட்ட முன்னே… விஸ்வாசம் பின்னே! இது வேற கணக்குங்க…

TamilRockers: எந்தப் படமாக இருந்தாலும், படம் ரிலீஸாகி சில மணி இடைவெளியில் அதனை திருட்டுத் தனமாக வெளியிடுவது தமிழ் ராக்கர்ஸின் வாடிக்கை.

Tamilrockers, Viswasam Full Movie download, விஸ்வாசம், தமிழ் ராக்கர்ஸ்
Tamilrockers, Viswasam Full Movie download, விஸ்வாசம், தமிழ் ராக்கர்ஸ்

TamilRockers Leaked Petta and Viswasam: ரஜினிகாந்தின் பேட்ட படம் முதல் நாள் மாலை வரை தமிழ் ராக்கர்ஸின் பிடியில் சிக்கவில்லை. இப்படியே சில நாட்களுக்காவது தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைத்தால், படத்தில் வேலை பார்த்த தொழிலாளர்களின் உழைப்பு திருடப்படுகிற கொடுமை நடக்காமல் இருக்கும் என பலரும் நினைத்தனர். ஆனால் முதல் நாள் மாலையில் முதலில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், அடுத்த சில மணி நேரங்களில் விஸ்வாசம் படத்தையும் தனது இணையதளத்தில் வெளியிட்டு அசுரத்தனமாக சிரித்தது.

சினிமா உலகுக்கு பெரும் மிரட்டலாக இருந்து வருவது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். எந்தப் படமாக இருந்தாலும், படம் ரிலீஸாகி சில மணி இடைவெளியில் அதனை திருட்டுத் தனமாக வெளியிடுவது தமிழ் ராக்கர்ஸின் வாடிக்கை.

பொங்கல் ரிலீஸான அஜீத்தின் விஸ்வாசமும் தமிழ் ராக்கர்ஸின் கோரப்பிடியில் சிக்கிவிடுமோ? என்கிற பீதி இருந்தது. ஆனால் வெளிநாடுகளில் நள்ளிரவில் வெளியான விஸ்வாசம், ஜனவரி 10 அன்று தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் ஆனது.

எனினும் அன்று மாலை வரை தமிழ் ராக்கர்ஸால், விஸ்வாசத்தை வெளியிட முடியவில்லை. இதனால் திரை உலகத்தினர் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனால் இதற்கிடையே அன்று மாலை 6 மணிக்கு தமிழ் ராக்கர்ஸில் விஸ்வாசம் ரிலீஸ் என சமூக வலைதளங்களில் சிலர் தகவல் பரப்பினர்.

ரஜினிகாந்தின் பேட்ட படமும் அன்று மாலை வரை தமிழ் ராக்கர்ஸின் பிடியில் சிக்கவில்லை. இப்படியே சில நாட்களுக்காவது தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைத்தால், படத்தில் வேலை பார்த்த தொழிலாளர்களின் உழைப்பு திருடப்படுகிற கொடுமை நடக்காமல் இருக்கும் என பலரும் நினைத்தனர்.

ஆனால் முதல் நாள் மாலையில் முதலில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், அடுத்த சில மணி நேரங்களில் விஸ்வாசம் படத்தையும் தனது இணையதளத்தில் வெளியிட்டு அசுரத்தனமாக சிரித்தது. இதனால் பேட்ட, விஸ்வாசம் படக் குழுவினரின் நிம்மதி அதிக நேரம் நீடிக்க வில்லை.

எனினும் இதற்கு முந்தைய பல படங்களை ஒப்பிடுகையில் தமிழ் ராக்கர்ஸ் இவ்வளவு தாமதித்ததே, பேட்ட மற்றும் விஸ்வாசம் குழுவினருக்கு சிறு வெற்றிதான். வேறென்ன சொல்ல..?

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viswasam petta first win against tamilrockers

Next Story
Viswasam Box Office Collection Day 1: விஸ்வாசம் வசூல் எப்படி? லேட்டஸ்ட் அப்டேட்Viswasam Box Office Collection, விஸ்வாசம் படம் வசூல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com