சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்திருக்கும் திரைப்படம் விஸ்வாசம். சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் நாளை(ஜன.10) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் நாளை ரிலீசாவதால், பொங்கல் பண்டிகை நாளை தானோ என்ற ஐயம் எழுகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சென்சார் போர்டு உறுப்பினரும், பத்திரிக்கையாளருமான உமர், விஸ்வாசம் படம் குறித்து தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார். விஸ்வாசம் சென்சார் காட்சி திரையிடலுக்கு பிறகு அவர் அப்படம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், அஜித்தின் விஸ்வாசம் படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கிறது என்றும், அஜித் மிரட்டலாக நடித்திருக்கிறார் என்றும், ஒட்டுமொத்த படத்தையும் அவர் ஆக்கிரமித்துள்ளார் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும், "விஸ்வாசம் மிரட்டலான மாஸ் எண்டர்டெயினர்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
நாளை தமிழகத்தில் ரிலீசாகவிருக்கும் விஸ்வாசம் படத்திற்கு, தற்போதே பாஸிட்டிவான ரிசல்ட் வந்திருப்பதால் அஜித் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர்.