Advertisment

"மிரட்டலான மாஸ் எண்டர்டெயினர்" - வெளியானது விஸ்வாசம் ரிசல்ட்!

திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

author-image
WebDesk
Jan 09, 2019 19:36 IST
viswasam box office collection

viswasam review - விஸ்வாசம் விமர்சனம்

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்திருக்கும் திரைப்படம் விஸ்வாசம். சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் நாளை(ஜன.10) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் நாளை ரிலீசாவதால், பொங்கல் பண்டிகை நாளை தானோ என்ற ஐயம் எழுகிறது.

Advertisment

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சென்சார் போர்டு உறுப்பினரும், பத்திரிக்கையாளருமான உமர், விஸ்வாசம் படம் குறித்து தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார். விஸ்வாசம் சென்சார் காட்சி திரையிடலுக்கு பிறகு அவர் அப்படம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், அஜித்தின் விஸ்வாசம் படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கிறது என்றும், அஜித் மிரட்டலாக நடித்திருக்கிறார் என்றும், ஒட்டுமொத்த படத்தையும் அவர் ஆக்கிரமித்துள்ளார் என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும், "விஸ்வாசம் மிரட்டலான மாஸ் எண்டர்டெயினர்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாளை தமிழகத்தில் ரிலீசாகவிருக்கும் விஸ்வாசம் படத்திற்கு, தற்போதே பாஸிட்டிவான ரிசல்ட் வந்திருப்பதால் அஜித் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர்.

#Ajith #Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment