Viswasam in russia : தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/viswasam-in-russia-2-1024x683.jpg)
உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த படம் ரஷ்யா மற்றும் உக்ரைனிலும் வெளியாகவுள்ளது. அஜித் படம் ஒன்று ரஷ்யாவில் வெளியாவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Viswasam in russia : ரஷ்யாவில் விஸ்வாசம் திரையிடல்
ரஜினியின் 2.0 படத்தை ரஷ்யாவில் வெளியிட்ட அதே நிறுவனம் தான் தற்போது விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. ரஷ்யாவில் எட்டு நகரங்களில் ‘விஸ்வாசம்’ வெளியாகவுள்ளதாகவும், இன்னும் ஒருசில நகரங்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ரஷ்ய ரிலீஸ் உரிமை பெற்ற நிறுவனத்தின் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/viswasam-in-russia-3-1024x683.jpg)
ரஷ்யாவில் ஏற்கனவே ரஜினியின் காலா, 2.0 மற்றும் விஜய்யின் சர்கார் ஆகிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் அந்நாட்டில் தமிழ்ப்படம் ஒன்று அதிக திரையரங்குகளில் வெளியாவது அஜித் விஸ்வாசம் படம் தான் என்றும், இதுவொரு சாதனையாக கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விஸ்வாசம் பாடல்கள் வெளியானது... மாஸ் தீம் வேற லெவல்
இந்த செய்தி வெளியான நொடியில் இருந்து அஜித்தின் ரசிகர்கள் எல்லோரும் இப்போது விஸ்வாசம் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.