/tamil-ie/media/media_files/uploads/2018/12/viswasam-2.jpg)
viswasam, விஸ்வாசம், விஸ்வாசம் ட்ரெய்லர், Viswasam trailer, Viswasam Official Trailer Launch Today
Viswasam Trailer Releases Today : நடிகர் அஜித் - இயக்குநர் சிவா கூட்டணியில் வெளியாக இருக்கும் மூன்றாவது திரைப்படம் விஸ்வாசம் ஆகும்.
இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான். படத்தின் பாடல்கள் டிசம்பர் 16ம் தேதி வெளியானது.
மேலும் படிக்க : விஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியீடானது
Viswasam Trailer :
ட்ரெய்லெர் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தித்திக்கும் செய்தியை நேற்று அறிவித்திருந்தது சத்திய ஜோதி தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் தளம்.
நாளை மதியம் சரியாக 01.30 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தைப் பற்றிய ஆவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியிருந்தது.
இந்நிலையில் இன்று மதியம் சரியாக 01:30 மணிக்கு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களின் பேராவலை பூர்த்தி செய்துள்ளனர் திரைப்படக் குழுவினர்.
இந்த படத்தில் இந்த படத்தில் ஜகபதி பாபு, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் மற்றும் கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிபதிவு வெற்றி, கலை வடிவமைப்பு மிலன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.