நீண்ட காலமாக நாம் ‘வாழ்க்கை ரொம்ப சிறியது’ என்பதை சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், முக்கிய நகைச்சுவை நடிகர் விவேக் தனது 59 வயதில் காலமானார் என்பதைப் பற்றி கேள்விப்பட்டபோது அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தையும் ஈர்ப்பையும் நான் புரிந்துகொண்டேன்.
நடிகர் விவேக் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நடிகர் விவேக் மயக்க நிலையில் கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று சிம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அவர் அவசரமாக ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என்று மருத்துவமனை கூறியுள்ளது. இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றமில்லை. நடிகர் விவேக் சனிக்கிழமை அதிகாலையில் காலமானார்.
நடிகர் விவேக்கின் அகால மரணம் அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறுவதுகூட குறைத்து சொல்வதாக இருக்கும். சில நாட்களுக்கு முன்பு, கோவிட் -19 தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் விவேக் தலைப்புச் செய்திகளை வெளியிட்டார். கடந்த வியாழக்கிழமை ஒரு பொது விளம்பர நிகழ்ச்சியில், தடுப்பூசி குறித்த பாதுகாப்பு அச்சங்களை போக்க விவேக் சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் தனது முதல் கோவாக்சின் மருந்தை எடுத்துக் கொண்டார். இது செய்திகளுக்காக செய்யும் ஒரு விளம்பர உத்தி அல்ல. இது விவேக்கின் முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். அவர் தனது முழு வாழ்க்கையிலும் ஏதாவது ஒன்றுக்காக அவர் அறியப்பட்டார்.
புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் மனதில் உருதி வேண்டும் (1987) மூலம் விவேக் நடிகராக அறிமுகமானார். ஆனால், அவரது இரண்டாவது படமான புதுப்புது அர்த்தங்கள் படம் மூலம்தான் தமிழ் திரையுலகில் தனது அடையாளத்தை பதித்தார். அந்த படத்தில் அவர் ஒரு பிரபலமான பாடகருக்கு நல்ல இயல்புடைய, விசுவாசமான உதவியாளராக நடித்தார். தனது முதலாளியின் திருமண வாழ்க்கை மீட்பவராக நடித்திருந்தார். இதில் அவருடைய முதலாளியின் கெட்ட மாமியாராக நடித்த காஞ்சனமாலாவை கிண்டல் செய்து அவருக்கு மன உளைச்சலைத் தருவார். தொலைபேசியில் அவர்தான் பேசுகிறார் என்று தெரியாமல் குரலை மாற்றி பிரபல சினிமா ஸ்டார்களின் குரல்களில் மிமிக்ரி செய்து முதலாளியின் வில்லி மாமியாரை கிண்டல் செய்வார். மேலும், அவரை தமிழ் சினிமா ரசிகர்களின் குடும்பத்தில் ஒருவராக மாற்றிய பஞ்ச் டயலாக் என்றால் அது “இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்” என்பதுதான். இந்த வசனம் மனித இருப்ப்பின் பலவீனத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் நகைச்சுவையாக சுருக்கமாகக் கூறியது. மேலும், ‘வாழ்க்கை மிகவும் சிறியது’ என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
ஆம், இந்த உலகம் விவேக் மரணத்தில் இருந்தும் கடந்து செல்லும். ஆனால், இந்திய சினிமா வரலாற்றில் அவருக்கு ஒரு சிறப்பான இடம் கிடைக்கும் என்பதும் உண்மைதான். 1990களில் வளர்ந்தவர்களின் குழந்தைப் பருவ நினைவுகளில் ஒரு முக்கிய பகுதியை அவர் உருவாக்குகிறார். அவர் வெறுமனே சிரிப்பூட்டுபவராக மட்டும் இல்லை. அவர் தனது நகைச்சுவையைப் பயன்படுத்தி நம்மை சிந்திக்க வைத்தார். விமர்சன சிந்தனையை ஊக்குவிப்பதற்கும், சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அல்லது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் கருத்துகளை இணைப்பதற்கும் என எந்த ஒரு வாய்ப்பையும் அவர் ஒருபோதும் இழக்கவில்லை. மேலும், அவரது தனித்துவமான நகைச்சுவை அவருக்கு சின்ன கலைவனார் என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது. கலைவனார் என்று அழைக்கப்பட புகழ்பெற்ற நகைச்சுவை நட்சத்திரம் என்.எஸ். கிருஷ்ணனைப் போலவே அவரது நகைச்சுவை சுத்தமாகவும், முரணாகவும் சமூக ரீதியாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது. அவருடைய நகைச்சுவை நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. ஊழல் முதல் சமூக சமத்துவமின்மை வரை, விவேக் தனது நகைச்சுவையின் மூலம் நம் சமூகத்தின் அனைத்து முக்கிய பிரச்சினைகளையும் விவாதித்தார். அவர் ஒரு லட்சிய நகைச்சுவை நடிகர். மூடநம்பிக்கை பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கும் அதற்கு அவரது பார்வையாளர்களைப் பயிற்றுவிப்பதும், அதை நோக்கி தள்ளுவதும் அவருடைய நோக்கமாக இருந்தது.
விவேக் அறிவுரை கூறுபவராக மட்டும் இல்லை. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மிகப்பெரிய ரசிகரான அவர் பசுமை கலாம் என்ற சுற்றுச்சூழல் முயற்சியைத் தொடங்கினார். இந்த பிரச்சாரம் புவி வெப்பமடைதலின் அச்சுறுத்தலையும், நம் நாடு முழுவதும் பசுமை போர்வையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தது.
நடிகர் விவேக்கின் விடைபெறல் நம்முடைய சமூக, கலாச்சார உரையாடலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“