Vivek Joins with Kamal: நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தின், இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இதன் படபிடிப்பு தொடங்கப்பட்டு, பின்னர் சிறிது இடைவெளி விட்டிருந்தனர்.
இப்போது மீண்டும் ’இந்தியன் 2’ன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதர்காக சென்னை பூந்தமல்லி அருகே அரங்குகள் அமைக்கப்பட்டு, கமல் ஹாசன் தவிர மற்ற நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள். வரும் 28-ந் தேதி இந்தியன் 2 படபிடிப்பில் இணைகிறார் கமல்ஹாசன்.
காஜல் அகர்வால் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருந்த நிலையில், ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் என மேலும் மூன்று நடிகைகளும் கமிட்டாகியிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் மேலும் ஒருவர் புதுவரவாக இணைந்துள்ளார். அவர் தான் நடிகர் விவேக்.
இதை ட்விட்டரில் அறிவித்திருக்கும் விவேக், கமலுடன் நடிக்க வேண்டுமென்ற தனது 32 வருட கனவு தற்போது நினைவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிகழும் வரை சொப்பனம்; நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார் க்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்கா வுக்கு என் வாழ்த்துக்கள்???????? miles to go b4 I sleep!
— Vivekh actor (@Actor_Vivek) August 21, 2019
ஏற்கனவே ஷங்கரின் பாய்ஸ், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களில் விவேக் நடித்துள்ளார். ஆனால் இதுவரை கமலுடன் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு ஆழமாக இருந்தது. தமிழ் சினிமாவின் அத்தனை காமெடியன்களுடனும் நடித்து விட்ட கமல், விவேக்குடன் மட்டும் இணையாமல் இருந்தார். தற்போது அந்த குறை, நிறையாகியிருக்கிறது!