Advertisment
Presenting Partner
Desktop GIF

நரேந்திர மோடியாக நடிகர் விவேக் ஓபராய்... மேக் அப்புக்கு மட்டுமே இத்தனை மணி நேரமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vivek oberoi in narendra modi biopic, நடிகர் விவேக் ஓபராய்

vivek oberoi in narendra modi biopic, நடிகர் விவேக் ஓபராய்

நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் நடிகர் விவேக் ஓபராய் பல வேடங்களில் தோன்றியிருக்கிறார்.

Advertisment

பிரபல சினிமா வசூல் ஆலோசகர் தரண் ஆதர்ஷ் தந்து டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில், “நரேந்திர மோடி பயோ பிக்-ல் பல வேடங்களில் இருக்கும் விவேக் ஓபராய்... ஓமங் குமார் இயக்கம், சந்தீப் சிங், சுரேஷ் ஓபராய் மற்றும் ஆனந்த் பண்டிட் தயாரிப்பு” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் விவேக் ஓபராய் தோற்றங்கள்

சில தகவல் வட்டாரங்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், விவேக் ஆனந்த் ஓபராய் விடியற் காலை 2.30 மணிக்கெல்லாம் விழித்துவிடுவாராம். சுமார் 7 - 8 மணி நேரம் மேக் அப்பிற்கு பிறகு சரியாக காலை 8 மணிக்கெல்லாம் படப்பிடிப்பிற்கு தயாராகி வந்துவிடுவார் என்றும், சில காரணங்களுக்காக வெறும் நீர் ஆகாரத்தை மட்டுமே அவர் எடுத்துக் கொள்கிறாராம்.

இந்த படத்தின் உருவாக்கத்தின்போது படப்பிடிப்பின்போது மட்டுமல்லாமல், படப்பிடிப்பிற்கு அப்பாற்பட்டும் அவரின் நடவடிக்கைகள் மோடியை போலவே உள்ளதைப் பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த பயோ பிக்கின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறுகையில், “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு தகுந்த நடிகர் தான் தேவைப்பட்டது. விவேக் எங்க நிறுவனத்துடன் சிறந்த அறிமுகப் படம் ஒன்றில் நடித்திருந்தார், அதே வருடத்திலும் அவர் நடிப்பில் சாத்தியா என்ற படம் வெளியானது. மோடியின் வாழ்க்கை வரலாறு படமான 1957ம் வருடத்தில் இருந்து 2019ம் ஆணு வரையிலான இடைவெளியை கொண்டது. விவேக் இதற்காக 15 தோற்றங்களின் பரிசோதனைகளை மேற்கொண்டார். அவர் இந்த அளவிற்கு ஆர்வத்தையும் உழைப்பையும் காட்டியதால் அவரையே இந்த படத்திற்கு தேர்ந்தெடுத்தோம்.” என்றார்.

March 2019

“16 வருடங்களுக்கு முன்பு நான் எப்படி உணர்ந்தேனோ அதே போல் இப்போதும் உணர்கிறேன். அதே உற்சாகமும் வாய்ப்பின் பசியுடனும் இருக்கிறேன் ஏனென்றால் இது ஒரு நடிகரின் வாழ்வில் அமைந்திருக்கும் சிறந்த கதாபாத்திரம். இந்த உலகத்திலேயே நரேந்திர பாய் ஒரு உயர்ந்த மனிதர், அவரது நற்குணங்களையும் கதாபாத்திரத்தையும் திரையில் கொண்டு வருவது மிகப்பெரிய சவால். இத்தகைய பயணத்தில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எனக்கு வேண்டும்” என்று ஜனவரி மாதமே போஸ்டர் ரிலீஸ் விழாவில் விவேக் தெரிவித்திருந்தார்.

விவேக் ஆனந்த் ஓபராய் தவிர்த்து, போமன் இராணி, மனோஜ் ஜோஷி, பர்கா பிஷ்ட், சரீனா வாஹப், தர்ஷன் ராவல், அக்‌ஷத் ஆர் சலூஜா, அஞ்ஜான் ஸ்ரீவட்சன், ராஜேந்திர குப்தா மற்றும் யதீன் கர்யேகார் ஆகியோரும் இடம்பெற்றிருக்கின்றனர்.

Vivek Annand Oberoi Bollywood Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment