பார்.. முழுசா மோடியாக மாறியிருக்கும் விவேக் ஓபராய் பார்

Narendra Modi Biopic : விவேக் ஓபராய் நடிக்க இருக்கும் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படத்தின் போஸ்டருக்கு பிளஸ் – மைனஸ் விமர்சனங்களை பலரும் முன் வைக்கின்றனர்.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. பி.எம்.நரேந்திர மோடி என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ள இந்தப் படத்தில் பிரதமர் மோடி கெட்-அப்பில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மோடியின் பிராண்ட் உடையான அரைக்கை குர்தாவில் விவேக் ஓபராய் நிற்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Narendra Modi Biopic : நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் விவேக் ஓபராய்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பற்றிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற திரைப்படம் இம்மாதம் வெளியாகிறது. மன்மோகன் சிங் வேடத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடித்துள்ள இந்தப் படம் திரைக்கு வரும் முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறது.

The Accidental Prime Minister : அச்சு அசல் மன்மோகன் சிங்காக மாறியிருக்கும் அனுபம் கெர்… அசத்தும் டிரெய்லர்

இந்நிலையில் மோடியின் பிரதமர் அனுபவங்களைத் தழுவி பி.எம்.நரேந்திர மோடி என்ற பெயரில் ஒமங்க்குமார் இயக்கத்தில் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். மோடி வேடத்தில் விவேக் ஓபராய் அசத்தும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மும்பையில் நடந்த விழாவில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார்.

இந்தப் போஸ்டரை டிவிட்டர் பக்கத்தில் விவேக் ஓபராய் வெளியிட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை வேண்டியுள்ளார். 23 மொழிகளில் தயாராகும் பி.எம்.நரேந்திர மோடி படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close