தமிழ் சினிமாவிற்குள் கால்தடம் பதித்த நடிகர் அஜித்:
செல்வா இயக்கத்தில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயராக அறிமுகமானவர் அஜித். இந்த படம் 1993-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியானது. அஜித்துக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன.
அமராவதி படத்தில் நடிக்க நடிகர் அஜித் ஒப்புக்கொண்டு அக்ரிமென்ட்டில் கையெழுத்திட்ட நாள் இன்று. அதாவது சரியாக 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி இப்படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து அஜித் சினிமாவில் களமிறங்கி நாளையுடன் 26 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் தல அஜித் ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்தை வாழ்த்தி பதிவு செய்துள்ளார். அதில் “26 வருடங்கள் என்னுடைய நண்பா, லெஜண்டாக மிகச்சிறந்த வளர்ச்சி. லவ் யூ பிரதர். பல்வேறு மறக்க முடியாத செயல்கள் மூலம் எங்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறாய் என்று நிச்சயமாகக் கூறமுடியும். எனக்கு ‘விசுவாசம்’ இருக்கா” என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
26 years of my nanba, greatness growing into legend! Love you brother! I’m sure you will entertain us with many many many more unforgettable performances! Yenuka ‘Viswasam’ iruka! ???? #26YrsOfUnparalleledAJITH #Thala #Ajith #Viswasam pic.twitter.com/kjFcoafnIC
— Vivek Anand Oberoi (@vivekoberoi) 2 August 2018
அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் விவேக் ஓபராய் என்பது குறிப்பிடத்தக்கது.