’வெளி அழகால் மட்டுமல்ல…’ ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளிய விவேக்!

“மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர் உதவுகிறார். அவருடைய கொடையுள்ளத்திற்கு வணக்கம்”

Vivek with Hansika Motwani
ஹன்ஸிகாவுடன் விவேக்.

நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விவேக். சமூக செய்திகளை நகைச்சுவையுடன் கலந்து நடித்து வந்ததால், பார்வையாளர்களால் மிகவும் நேசிக்கப்படுகிறார். சூர்யாவின் போலீஸ் திரைப்படமான ‘சிங்கம்’ மற்றும் ‘சிங்கம் 2’ ஆகியவற்றில் விவேக் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்தார், இது பார்வையாளர்களால் நன்றாக ரசிக்கப்பட்டது.

ரொட்டி, சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஈஸியான வெஜ் குருமா!

‘சிங்கம் 2’ படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் திரையைப் பகிர்ந்துக்  கொண்டார். அதில் பள்ளி மாணவியாக நடித்தார் ஹன்ஸிகா. இந்நிலையில் தற்போது, ‘சிங்கம் 2’ படத்தில் அவரின் நடிப்பு குறித்து விவேக் மனம் திறந்து பாராட்டியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விவேக், ”சிங்கம் 2-ல் அனைவருக்கும் “ஹான்சிகாவின் நடிப்பு” பிடித்திருந்தது! சினிமாவின் மிக அழகான முகங்களில் ஒன்று. வெளி உடல் அழகால் மட்டுமல்ல, தங்க இதயத்தாலும் நம்மை ஈர்க்கிறார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர் உதவுகிறார். அவருடைய கொடையுள்ளத்திற்கு வணக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ்அப்பில் என்ன இருக்கு என்ன இல்லை – அறிந்துகொள்ள எளிய பதிவு

இதற்கிடையில், ஹன்சிகா மோத்வானி தனது 50-வது படமான ‘மகா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். யு.ஆர்.ஜமீன் இயக்கத்தில், ஹன்சிகா மோத்வானிக்கு ஜோடியாக ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். தவிர மாப்பிள்ளை, மனிதன் போன்ற படங்களிலும் விவேக் – ஹன்ஸிகா இணைந்து நடித்துருப்பது குறிப்பிடத்தக்கது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vivek praises hansika motwani for her philanthrophy

Exit mobile version