ஸ்மார்ட்டாக மாறிய சன் மியூசிக் ஐஸ்வர்யா: அடுத்த ரவுண்டுக்கு தயார்?

VJ Aishwarya prabhakar new instagram photo goes viral: சன் டிவி, விஜய் டிவி தொகுப்பாளினி ஐஸ்வர்யா நீயூ லுக்; இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்

விஜே ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புதிய புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சன் டிவியில் சன் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் விஜே ஐஸ்வர்யா. பின்னர் அமுல் சூப்பர் குடும்பம், சன் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்தார். அதன்பின் விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் மற்றும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றினார்.

மேலும், சன் டிவி-யில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலில் திரெளபதியாகவும் நடித்திருந்தார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘ஜோடி 3’ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடனம் ஆடினார். இவர்கள் இறுதிப் போட்டிக்கும் தேர்வானார்கள். இவர் தொகுப்பாளராக அறிமுகமானது ஒரு சுவாரஸ்யமான கதை. இவரது சகோதரர் தொகுப்பாளராக விரும்பி, ஒரு தொலைக்காட்சியின் நேர்காணலுக்கு சென்றுள்ளார். நேர்காணலில் அவர் தேர்வாகவில்லை. ஆனால் கூட சென்ற ஐஸ்வர்யா தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

சின்னத்திரையில் பிஸியான தொகுப்பாளினியாக வலம் வந்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா, கடந்த 2015 ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர் சின்னத்திரையை விட்டு ஒதுங்கினார். சமீபத்தில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் குண்டாக இருந்த அவர் மீண்டும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட ஐஸ்வர்யா, பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு உடற்பயிற்சி டிப்ஸ்களை கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார். கரகாட்ட கலையை இன்னும் மறக்காமல், தற்போது வெஸ்ர்டன் இசைக்கேற்ப கரகாட்டம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் இவரை பலரும் சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vj aishwarya prabhakar new instagram photo goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com