VJ Akshaya Tamil News: சன் டிவியில் பிரைம்டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் சுப்பு சூரியன், பிரியங்கா நல்காரி, வடிவுக்கரசி ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் வரந்தோறும் வெளியாகி வரும் டிஆர்பி ரேட்டிங்கில், முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. இதற்கு, ரோஜா – அர்ஜூன் ரொமான்ஸ் கட்சிகள் தான் காரணம் என்றாலும், அனுவின் வில்லத்தமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போது அணு கதராபாத்திரத்தில் சன் டிவியின் தொகுப்பாளினி அக்ஷயா நடித்து வருகிறார். இவருக்கு முன்பு கொடூர வில்லியாக நடித்து வந்த ஷாம்லி கர்ப்பமாக இருப்பதால் அவர் விலகினார். எனவே அவருக்கு பதில் அக்ஷயா நடிக்கிறார். இவரின் வில்லத்தமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதால் அவரையும் அனுவாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

இந்நிலையில், அக்ஷயா தனக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் தன்னை தனிமைப்படுத்தி விட்டதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அக்ஷயா, தனக்கு ஆரம்பத்தில் மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருந்தாகவும், அதனால், தான் மருத்துவரை சென்று பார்த்தாகவும் கூறியுள்ளார். கொரோனா பரிசோதனைக்கு பிறகு தனக்கு துரதிஷ்டவசமாக கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டு விட்டதால் தன்னை முன்னெச்சரிக்கையுடன் தனிமைப்படுத்தி கொண்டதாகவும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், “மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள், கட்டாயம் மாஸ்க் அணியுங்கள். நான் விரைவில் முற்றிலுமாக குணமடைந்து திரும்புவேன். உங்கள் பிரார்த்தனையில் என்னையும் நினைத்து கொள்ளுங்கள்” என்றும் அக்ஷயா அந்த இன்ஸ்டா பதிவில் கூறியிருக்கிறார். இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“