Advertisment

அஞ்சனாவை வீடியோ ஜாக்கியாக தெரியும், அவரின் இந்த அவதாரம் உங்களுக்கு தெரியுமா?...

VJ Anjana : வி.ஜே.அஞ்சனா தன்னுடைய சமூக வலைதளங்களில் தாய்மையைப் பிரதிபலிக்கும் விதமாக புது அம்மாக்களுக்கு உதவும் வீடியோக்களை உரிய விளக்கங்களுடன் பேசி வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sun tv, anjana, vj anjana, zee tamizh, kayal chandran, video jockey, kid, rudraksh, kid - mother kayal

அஞ்சனாவின் அழகிய குடும்பம்

10 ஆண்டுகளுக்கு மேலாக தொலைகாட்சி தொகுப்பாளினியான, சின்னத்திரையில் பயணித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்திருப்பவர் வி.ஜே.அஞ்சனா. சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

Advertisment

அப்படி கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல். சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

பின்னர் கர்ப்பமான அஞ்சனா, தொலைக்காட்சியிலிருந்து பிரேக் எடுத்தார். அவருக்கு கடந்த வருடம் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்த சன் குழுமத்திலிருந்து விலகி, தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

வி.ஜே.அஞ்சனா தன்னுடைய சமூக வலைதளங்களில் தாய்மையைப் பிரதிபலிக்கும் விதமாக புது அம்மாக்களுக்கு உதவும் வீடியோக்களை உரிய விளக்கங்களுடன் பேசி வெளியிட்டு வருகிறார். அஞ்சனா வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் இளம் அம்மாக்களிடம் நல்ல வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

`என்னுடைய தாய்மை என்னை புதுசா யோசிக்கவும் செயல்படவும் வைத்திருக்கிறது. இதில் இந்தத் திட்டமிடலும் இல்லை. என்னுடைய மகப்பேறு காலத்தில் நான் சந்தித்த, சிக்கல்களையும், பிரச்னைகளைக் கையாண்ட விதத்தையும், அதற்கான தீர்வுகளுடன் வெளியிட்டு வருகிறேன். பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான என்னுடைய முதல் வீடியோவே மக்களிடம் நிறைய பாசிட்டீவ் கமென்ட்களைப் பெற்றுத்தந்தது. அதன் பின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பு, தாய்மைக்குப் பின்னான உடல் குறைப்பு, தழும்புகளுக்கான தீர்வுகள், போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை எளிதாகக் கடக்க உதவும் வழிமுறைகள் என இளம் தாய்மார்களுக்குப் பயன்படும் நிறைய வீடியோக்களை வெளியிட்டு வருகிறேன்.

சில பெண்கள் தாங்கள் சந்தித்த பிரச்னைகளையும் தீர்வுகளையும் பகிர்ந்து வீடியோ வெளியிடும் படியும் கூறுகின்றனர். மற்றவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பை எனக்கு என் குழந்தை உருவாக்கித் தந்திருக்கிறான். தாய்மை வீடியோக்கள் மூலமாகச் சமூக வலைதளத்தைச் சரியாகப் பயன்படுத்தும் முழு மன திருப்தி வந்துள்ளது. தொடர்ந்து குழந்தை வளர்ப்பில் அன்றாடம் நான் சந்திக்கும் பிரச்னைகளை தீர்வுகளுடன் வீடியோக்களாக வெளியிட உள்ளேன். குழந்தைக்கு இப்போது ஏழு மாதம் ஆகிறது. இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். மற்றபடி இப்போதைக்கு, வேறு எந்த எதிர்காலத் திட்டமும் இல்லை'' என்கிறார் தாய்மை பொங்க.

Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment